டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா.. கமல் - மனிஷா கொய்ராலா லேட்டஸ்ட் பிக்.. இந்தியன் 2வில் இருக்காரா?

சென்னை: இந்தியன் 2 படத்திற்கான புரமோஷனை நடிகர் கமல்ஹாசன் தீவிரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், இந்தியன் படத்தில் நடித்த ஹீரோயின் மனிஷா கொய்ராலா மற்றும் கமல்ஹாசன் சந்தித்த புகைப்படம் ஒன்று கமல்ஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தில் அப்போதே இந்திய அளவில் படத்தை கொண்டு செல்ல வேண்டும் என பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலாவை ஹீரோயின் ஆக்கினார். இந்தியன் 2 படத்தில் ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள நிலையில், மனிஷா கொய்ராலா, சுகன்யா உள்ளிட்ட கதாபாத்திரங்களை காட்டுவாரா ஷங்கர் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Indian 2 Kamal Haasan Manisha Koirala 2


கமல்ஹாசன் ஏகப்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தியாவில் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்தப் படத்துக்கு ஆனா புரமோஷனை இந்தியன் 2 படக்குழு முழு வீச்சில் செய்து வருகிறது.

கமலுடன் மனிஷா கொய்ராலா சந்திப்பு: ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் மற்றும் முதல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மனிஷா கொய்ராலா இந்தியன் 2 படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக நடிகர் கமல்ஹாசனை சந்தித்தது மிகவும் சந்தோஷம் என அவர் கூறிய வார்த்தைகளை நடிகர் கமல்ஹாசன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக ஷேர் செய்துள்ளார்.

டெலிபோன் மணிபோல்: இந்தியன் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதுவும் கமல்ஹாசன் மற்றும் மனிஷா கொய்ராலா இருவருக்குமான டூயட் பாடலான ”டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா” பாடல் எல்லாம் ரசிகர்களுக்கு இன்றளவும் ஃபேவரைட் பாடலாகவே உள்ளது. இந்தியன் 2 படத்தில் அப்படி ஒரு பாடல் கூட அனிருத் உருவாக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் ரசிகர்கள் வைத்தனர்.

ஓவர்சீஸ் வசூல்: கல்கி திரைப்படமும் இந்தியாவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை தவிர்த்து மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் வசூலை ஈட்டிக் கொடுக்காத நிலையில் ஓவர்சீஸ் வசூல் அந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் விக்ரம் படத்தை பார்த்து எப்படி இண்டஸ்ட்ரி ஹிட் ஆக்கினார்களோ அதே அளவுக்கு இந்தியன் 2 படத்தையும் ஆக்குவார்கள் என எதிர்பார்த்து தான் வெளிநாடுகளில் ஷங்கர் பெரிய அளவில் புரமோஷனை நடத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X