விஜய் மட்டும் தான் சீஃப் கெஸ்ட்.. லியோ வெற்றி விழாவில் கமல் உள்ளிட்ட எந்த பிரபலமும் பங்கேற்கவில்லை!
சென்னை: சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏகப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அதே போல லியோ வெற்றி விழாவும் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதெல்லாம் இல்லை என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

லியோ படத்தின் கிளைமேக்ஸில் கமல்ஹாசன் நடித்திருந்த நிலையிலும், லியோ எல்சியூவில் இடம்பெற்றுள்ள நிலையிலும் கைதி ஹீரோ கார்த்தி, விக்ரம் ஹீரோ கமல் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்வார்களா என்றும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தலைவர் 171 படத்தை இயக்க உள்ள நிலையில், ரஜினிகாந்த் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என எதிர்பார்க்கப்பட்டது.
கமல் சீஃப் கெஸ்ட்டாக வருகிறார் என விஜய் ரசிகர்கள் சிலர் உருட்ட ஆரம்பித்த நிலையில், அதெல்லாம் யாரும் வரவில்லை என்றும் விஜய் மட்டும் தான் சிறப்பு விருந்தினரே என ரோகிணி தியேட்டர் ஓனரே தற்போது ட்வீட் போட்டுள்ளார்.
வாரிசு இசைவெளியீட்டு விழாவிலும்: விஜய் பட விழாக்களில் சமீப காலமாக நடிகர் விஜய்யை தவிர்த்து வேறு எந்த முன்னணி நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்பதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். வாரிசு பட இசை வெளியீட்டு விழாவுக்கு மகேஷ் பாபு எல்லாம் வரப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், விஜய் மட்டுமே பங்கேற்று இருந்தார். அந்த படத்தில் நடித்த நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
விஜய் தான் சீஃப் கெஸ்ட்: அதே போலத்தான் இன்று நடைபெற உள்ள லியோ சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் லலித் குமார், லோகேஷ் கனகராஜ், விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை த்ரிஷா பங்கேற்பாரே என்பது சந்தேகமாகவே உள்ளது என்றும் கூறுகின்றனர்.

கமல் கலந்து கொள்ளவில்லை: கேரளாவில் நடைபெற்று வரும் விழாவில் கமல்ஹாசன், மோகன்லால் மற்றும் மம்மூட்டி கலந்து கொண்ட நிலையில், நடிகர் கமல் லியோ வெற்றி விழாவில் பங்கேற்க மாட்டார் என்பது தெளிவாகி உள்ளது. மேலும், அதனை ரோகிணி தியேட்டர் ஓனர் ரேவந்த் சரண் ட்வீட் போட்டே உறுதி செய்துள்ளார். மேலும், நடிகர் விஜய்யின் குடும்பத்தில் இருந்து ஆட்கள் பங்கேற்பதும் சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











