Kamal Haasan - காமிக் கான் நிகழ்ச்சியில் கமல் ஹாசன்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

சான் டியாகோ: Comic Con (காமிக் கான்) ஹாலிவுட்டில் பிரபலமான காமிக் கான் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் மற்றும் புராஜெக்ட் கே படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவின் சான் டியாகோவில் 1970ஆம் ஆண்டு காமிக் கான் தொடங்கப்பட்டது. அந்த நிகழ்வில் சூப்பர் மேன், பேட் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் வேடம் அணிந்து ரசிகர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டனர். இதனையடுத்து அந்த நிகழ்வை பயன்படுத்த ஆரம்பித்த ஹாலிவுட் திரையுலகினர் தங்களது படங்களுக்கான விளம்பரத்தையோ, ப்ரோமோஷனையோ அதில் செய்ய ஆரம்பித்தனர்.

 Kamal Haasan and Project K Crew attended the Comic Con

அப்போதிருந்து அந்த நிகழ்வு உலக புகழ்பெற்றதாக மாறிவிட்டது. அமெரிக்காவில் நடந்த காமிக் கான் போல் இந்தியாவிலும் நடந்திருக்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த இந்திய காமிக் கானில் பாகுபலி படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் சான் டியாகோவில் காமிக் கான் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் கமல் ஹாசன், புராஜெக்ட் கே படக்குழுவினர் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

காமிக் கானில் புராஜெக்ட் கே குழு: அதன்படி இன்று தொடங்கிய காமிக் கான் நிகழ்ச்சியில் பிரபாஸ், கமல் ஹாசன் உள்ளிட்ட புராஜெக்ட் படக்குழுவினர் கலந்துகொண்டனர். கமல் ஹாசன் அந்த நிகழ்ச்சிக்கு சென்றபோது அவருக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில்தான் படத்தின் பெயரையும், க்ளிம்ப்ஸ் காட்சியையும் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் எதிர்பார்ப்பு: முன்னதாக பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படம் படுதோல்வியை சந்தித்தது. அதற்கடுத்ததாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்திருக்கிறார் பிரபாஸ். இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசருக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சலார் படத்துக்கு பிறகு புராஜெக்ட் கே படத்தில் நடிக்கிறார் பிரபாஸ். நாக் அஸ்வின் இயக்கவிருக்கும் இப்படமானது சைன்ஸ் பிக்‌ஷன் படமாக பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது. தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி போன்ற உச்ச நட்சத்திரங்கள் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கின்றனர்.

கமிட்டான கமல்: இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இப்படத்தில் கமல் ஹாசனும் கமிட்டானார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவர் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என்றும் மொத்தம் 25 நாட்கள் கால்ஷீட்டுக்கு கமல் ஹாசன் 130 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறவிருக்கிறார் என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X