ப்பா.. கமல் எப்படி இருக்காரு பாருங்க.. மீண்டும் தொடங்கியது இந்தியன் 2 படப்பிடிப்பு.. ஷங்கர் ஹேப்பி!

சென்னை: இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் இந்தியன் 2 செட்டில் சந்தித்துக் கொண்ட காட்சிகள் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் வெளியாகி உள்ளன.

லைகா தயாரிப்பில் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட படம் இந்தியன் 2.

2020ல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கிரேன் விபத்து காரணமாக 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். அதன் பின்னர், நடந்த வாக்குவாதங்கள் காரணமாக கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 படம் மீண்டும் இன்று முதல் தொடங்குகிறது.

கமலுக்கு தேசிய விருது கிடைத்தது

கமலுக்கு தேசிய விருது கிடைத்தது

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கமல்ஹாசனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. சேனாபதி, சந்துரு என இரு வேடங்களில் ஊழலுக்கு துணை போகும் மகனாகவும், தப்பு செய்யுறது புள்ளையா இருந்தாலும் குத்திக் கொல்வேன் என போட்டுத் தள்ளும் சேனாபதியாகவும் நடிப்பில் மிரட்டி இருந்தார் கமல்.

இந்தியன் 2 அறிவிப்பு

இந்தியன் 2 அறிவிப்பு

கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்தியன் 2 படத்தை ஆரம்பிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆன நிலையில், அந்த படம் இன்னமும் முழுமையாக உருவாகவில்லை. 2020ல் ஏற்பட்ட கிரேன் விபத்துக்கு பின்னர் இரண்டு ஆண்டுகளாக படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

தலையிட்ட உதயநிதி

தலையிட்ட உதயநிதி

இயக்குநர் ஷங்கர் ராம்சரண் படத்தை இயக்க டோலிவுட்டுக்கு புறப்பட்டு விட்டார். கமல்ஹாசன், பிக் பாஸ், விக்ரம் என கிளம்பி விட்டார். லைகா நிறுவனமும் பல பெரிய படங்களை தயாரிப்பதில் பிசியாக இருந்தது. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 படத்தை முடித்து விடலாம் என்கிற பேச்சுவார்த்தையில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின் லைகாவுடன் இணைந்து தானும் தயாரிப்பதாக முன் வந்த நிலையில், படப்பிடிப்பு மீண்டும் துவங்கி உள்ளது.

இன்று முதல் ஆரம்பம்

இன்று முதல் ஆரம்பம்

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ஷங்கரை செட்டில் சந்திக்கும் புகைப்படங்களையும் வீடியோவையும் ஷேர் செய்து இன்று முதல் இந்தியன் 2 மீண்டும் துவங்குகிறது என பதிவிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளார். விரைவில் 90 வயது சேனாபதியின் ஆட்டத்தை காண ரசிகர்களும் ஆர்வமாக வெயிட்டிங்.

காஜலும் ரெடி

காஜலும் ரெடி

ஒரு பக்கம் முறுக்கு மீசையெல்லாம் வைத்துக் கொண்டு சுதந்திர போராட்ட பீரியட் காட்சிகளில் நடிக்க கமல் ரெடியாகி உள்ள நிலையில், மறுபக்கம் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் காஜல் அகர்வால் குதிரையேற்ற பயிற்சிகளை எல்லாம் செய்து வரும் வீடியோக்களை ஷேர் செய்து தனது ரசிகர்களுக்கு இந்தியன் 2வில் நடிக்கப் போகும் சிக்னலை கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X