Thug Life: ஆண்டவர் அட்டகாசமா இருக்காரே.. சீறும் சிம்பு.. ரிலீஸ் தேதியுடன் வெளியான தக் லைஃப் டீசர்!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் படத்தின் டீசர் வெளியானது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கிய மணிரத்னம் நாயகன் படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் கமல்ஹாசன் உடன் இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் தக் லைஃப்.

thug life kamal haasan simbu

இந்த ஆண்டு டிசம்பர் மாதமே படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு தான் தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இந்த டீசர் மூலமாக படக்குழு வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன் பிறந்தநாள்: இந்திய சினிமாவின் என்சைக்ளோபீடியா என்றே கமல்ஹாசனை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். 70 வயதை கடந்த நிலையிலும், ஸ்டன்ட் காட்சிகளில் தெறிக்கவிட்டு வருகிறார் கமல்ஹாசன். தக் லைஃப், இந்தியன் 3, கல்கி 2, அன்பறிவ் மாஸ்டர்களின் படம் என வரிசையாக பல படங்கள் கமல்ஹாசனின் லைன் அப்பில் உள்ளன. எல்சியூவின் கடைசி படமாகவும் கமல்ஹாசனின் விக்ரம் 3 இருக்கும் என்கின்றனர்.

thug life kamal haasan simbu

தக் லைஃப் டீசர்: செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்த சிம்பு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்துள்ள தக் லைஃப் படத்தின் தாறுமாறான டீசர் வெளியாகி ஆண்டவர் ரசிகர்களுக்கு இதைவிட தரமான பிறந்தநாள் பரிசு வேறு என்ன இருக்க முடியும் என்கிற அளவுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு லுக்கிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் உலக நாயகன் தான் ஒரு மாஸ்டர் ஆஃப் இந்தியன் சினிமா என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது தெளிவாக தெரிகிறது.

ரிலீஸ் தேதி: தக் லைஃப் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஜூன் 5ம் தேதி தக் லைஃப் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

thug life kamal haasan simbu

கொஞ்சம் இருங்க பாய்: இந்தியன் 2 திரைப்படம் சொதப்பிய நிலையில், கமல் ரசிகர்களை திருப்திப்படுத்தும் படமாக தக் லைஃப் படம் அமையும் என கன்ஃபார்மாக தெரிகிறது. சிம்பு ரத்தம் தெறித்த சட்டையுடன் சிறுத்தை போல சீறி வரும் காட்சிகளும், அந்த கடைசி ஷாட்டில் மீசையில்லாத கமல்ஹாசன் கொஞ்சம் இருங்க பாய் என்பது போல 70 வயதிலும் என்னவொரு ஹேண்ட்ஸமாக உள்ளார் என்பதை பார்த்து ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் ஆகியுள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வரும் அந்த இரு வரிகள் புல்லரிக்க வைக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X