FICCI நிகழ்ச்சியில் கமலுடன் வந்த த்ரிஷா... திரையுலகில் பெண்களின் அசுர வளர்ச்சி!
சென்னை: இன்று நடைபெற்ற எப்ஐசிசிஐ (FICCI) விழாவில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த விழாவில், பேசிய நடிகை த்ரிஷா திரையுலகில் பெண்களின் வளர்ச்சி அபாரமானது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தற்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற த்ரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை த்ரிஷா நடிப்பு மட்டும் இன்றி முக்கியமான விழாக்களிலும் கலந்துகொண்டு வளர்ந்து வரும் இளம் நடிகைகளுக்கு உத்வேகம் அளித்து வருகிறார். அண்மையில் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற நடிகை த்ரிஷா சினிமாவை சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது என தெரிவித்திருந்தார். வயது 40 தாண்டினாலும், இன்னும் அப்படியே பொழிவுடன் காணப்படுகிறார் என ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

சினிமாவில் த்ரிஷாவின் வளர்ச்சி: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. வருடத்திற்கு 3 படங்களில் நடித்தாலும மனதிற்கு நிறைவான கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது பிளஸ் ஆக அமைந்துள்ளது. வயது 40 ஐ கடந்தாலும் தமிழ் சினிமாவில் இயக்குநர்களின் தேர்வில் த்ரிஷா இடம்பிடித்துள்ளார். இன்று வரை முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாகவும் தற்போது வரை நடித்து வருவது வியப்பை அளிக்கிறது. இருப்பினும் திரையுலகில் சிறப்பான உயரத்தை அடைந்துள்ளார் என்பதே நிதர்சனம்.

அஜித்துடன் 5வது முறையாக ஜோடி: விஜயின் 'லியோ' படத்தை தொடர்ந்து, அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் த்ரிஷா ஜோடியாக நடித்தார். இதனைத்தொடர்ந்து 5ஆவது முறையாக குட் பேட் அக்லி படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், அஜித்துடன் நடிப்பதில் பெருமையாக உள்ளதும் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிஸியாக இருக்கும் நடிகை: தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் படும் பிஸியாக இருந்து வருகிறார் த்ரிஷா. அவர் நடிக்கும் படம் என்றால் நல்ல கதையாக இருக்கும் என்ற பெயரை பெற்றுள்ளார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஐடென்டிட்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது நடிப்பும் பாராட்டை பெற்றது. விஜய், கமல், அஜித் மட்டும் இல்லாமல் இளம் கதநாயகர்களுடன் ஜோடியாக போட்டி போட்டு நடித்து வருகிறார். அவருக்கென்ற இமேஜை பிடித்துள்ள த்ரிஷாவிற்கு இளம் நடிகைகளுக்கு இன்ஸ்பிரேஷனாகவும் உள்ளார்.

கமலுடன் ஜோடி: மன்மதன் அம்பு படத்தின் மூலம் கமலுடன் இணைந்து நடித்த த்ரிஷா, பின்பு தூங்காவனம் படத்தில் போலீசாக நடித்து கமலுடன் பைட் காட்சிகளில் அசத்தினார். 2 படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறாவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தக் லைஃப் படத்தில் த்ரிஷா கமல் படத்தில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

FICCI நிகழ்ச்சியில் கமலுடன் த்ரிஷா: சென்னையில் இன்று நடைபெற்ற எப்ஐசிசிஐ நிகழ்ச்சியில் கமல் மற்றும் நடிகை த்ரிஷாவும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய த்ரிஷா, திரையுலகில் பெண்கள் தனித்த அடையாளத்தை பெற கடினமாக உழைக்கின்றனர். மேலும், அவர்களது வளர்ச்சி அபாரமாக உள்ளது என்று பெருமிதம் அடைந்தார். இது எனக்கும் மகிழ்ச்சியை தருகிறது என தெரிவித்தார். த்ரிஷாவின் அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











