கமல்ஹாசன் கண்ணோட ஓப்பனிங்.. விஜய்சேதுபதியின் மிரட்டல் என்ட்ரி.. தெறிக்குது விக்ரம் FDFS!

சென்னை: 4 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனின் படம் வெளியாகிறது என்பதே சினிமா ரசிகர்களுக்கு திருவிழாவாக மாறி உள்ளது.

Recommended Video

#VikramFDFS | சிம்பு பெயர் சொன்னதும் உணர்ச்சிவசப்பட்ட Cool Suresh

விக்ரம் படம் அதிகாலை 4 மணிக்கே அதிகளவிலான திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தின் டைட்டில் கார்டு முதல், விஜய்சேதுபதியின் தெறி மாஸான என்ட்ரி காட்சிகள் வரை அனைத்தையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து விக்ரம் FDFS-ஐ வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

வெளியானது விக்ரம்

வெளியானது விக்ரம்

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன், ஸ்வாதிஷ்டா, காயத்ரி, மைனா நந்தினி மற்றும் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதாரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கமல் கட் அவுட்

கமல் கட் அவுட்

பத்தல பத்தல பாடலில் சட்டையை வாயில் கடித்துக் கொண்டு கமல்ஹாசன் ஆட்டம் போடும் போஸ்டரை கட் அவுட்டாக ரசிகர்கள் தியேட்டர்களில் வைத்து பிரம்மாண்ட மாலைகளை அணிவித்து விக்ரம் படத்தின் FDFS கொண்டாட்டத்தை களைகட்டி வருகின்றனர். அதிகாலையிலேயே தியேட்டருக்கு ரசிகர்கள் படையெடுத்து உள்ளனர்.

அதே கண்கள்

அதே கண்கள்

சிறு வயதில் இருந்தே கமல்ஹாசனின் அதே கண்களுடன் படம் ஆரம்பிக்கும் இன்ட்ரோ டைட்டில் கார்டை பார்த்து வளர்ந்து இயக்குநர் ஆகியுள்ள லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்திலும் அதே டைட்டில் கார்டை போட்டு ஒட்டுமொத்த கமல் ரசிகர்களையும் உற்சாக கடலில் ஆழ்த்தி உள்ளார். ஓப்பனிங்கிற்கே தியேட்டர்களில் விசில் சத்தம் விண்ணை பிளக்கின்றன.

விஜய்சேதுபதி வெறித்தனம்

விக்ரம் படத்தில் சந்தானம் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய்சேதுபதியை போலீஸார் ஒருவர் கைது செய்து ஆட்டோவில் கொண்டு சென்றுள்ள, அவரது துப்பாக்கியை வெடிக்க வைத்து அவரை காலி செய்து விட்டு, அப்படியே கவிழும் ஆட்டோவில் இருந்து சட்டையே இல்லாமல் எழுந்து நடக்கும் மாஸ் ஓப்பனிங் காட்சியையும் ரசிகர்கள் ஷேர் செய்து இப்படியொரு ஓப்பனிங் சீனை பார்த்ததில்லை என கொண்டாடி வருகின்றனர்.

4 வருஷ தவம்

4 வருஷ தவம்

கமல்ஹாசனை கடந்த 4 ஆண்டுகளாக சின்னத்திரையில் பிக் பாஸாக பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், மீண்டும் வெள்ளித்திரையில் அவரை இப்படியொரு மிரட்டலான படத்தில் பார்க்கும் அனுபவத்தை 4 வருஷ தவம் என போட்டு கொண்டாடி வருகின்றனர். படத்தை இதுவரை பார்த்தவர்கள், பாசிட்டிவ் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் அடித்து நொறுக்கி வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் வாழ்த்து

விஜய் ரசிகர்கள் வாழ்த்து

விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சூர்யாவை காண ஒரு பக்கம் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்றால், லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை கொடுத்ததற்காகவும், அடுத்ததாக தளபதி 67ஐ இயக்கப் போவதற்காகவும் விக்ரம் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து அவர்களும் தியேட்டர்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஒரு சொல் மந்திரம்

ஒரு சொல் மந்திரம்

விக்ரம் படத்தின் டைட்டில் கார்டில் சிறப்பு தோற்றத்தில் சூர்யாவின் பெயரை பார்த்ததுமே சூர்யா ரசிகர்கள் தியேட்டர்களை அதிர வைத்து வருகின்றனர். சூர்யா என்ன ரோலில் எப்படியொரு பர்ஃபார்மன்ஸை குறைந்த நேரத்தில் கொடுத்து விக்ரம் 3க்கான எதிர்பார்ப்பை எகிற வைக்கப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X