twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!

    |

    சென்னை: பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் தனது புதிய ஃபேஷன் ஆடை நிறுவனத்தை அறிவித்தார் கமல்ஹாசன்.

    Recommended Video

    Best of BIGG BOSS 4 Finale | Aari Title Winner | Kamal Hassan Gifts | - FilmibeatTamil

    KH எனும் கதர் ஆடை நிறுவனத்தை துவங்கி உள்ளார். நெசவாளர்களுக்கு பயன்பெறும் வகையிலும், கதர் ஆடையில், தாத்தா டிரெஸ் மட்டுமல்ல எல்லாவிதமான ஃபேஷன் உடைகளையும் உருவாக்க முடியும் என நிரூபிக்கவே இந்த புதிய முயற்சியை தொடங்கி உள்ளார்.

    பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் முன்னதாக வாக்குறுதி கொடுத்த மாதிரியே அனைவருக்கும் கதர் துணிகளை பரிசாக அளித்தார்.

    சிரிக்கும் சிங்கம்.. ரம்யா பாண்டியனை வாழ்த்திய கமல்.. கலக்கலா உள்ளே போய் கூட்டிட்டு வந்த கவின்!சிரிக்கும் சிங்கம்.. ரம்யா பாண்டியனை வாழ்த்திய கமல்.. கலக்கலா உள்ளே போய் கூட்டிட்டு வந்த கவின்!

    கதர் காதல்

    கதர் காதல்

    காந்திய சிந்தனைகளில் பெரிதும் ஈர்க்கப்பட்ட கமல்ஹாசன், காந்தி கடைசி வரை பயன்படுத்திய கதர் ஆடையை ஃபேஷன் உலகிற்கு ஏற்ப எப்படி அப்கிரேட் செய்வது என்கிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரத்திலும் கமல் அணிந்து வந்த கலர்ஃபுல் கோட்சூட் எல்லாமே கதர் ஆடை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய பிராண்ட்

    புதிய பிராண்ட்

    இந்நிலையில், கிராண்ட் ஃபினாலேவில் தனது புதிய பிராண்டான கமல் ஹாசன் சுருக்கமாக KH எனும் கதர் ஆடை நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன். அதன் பிராண்ட் லோகோவும் கதர் தறி போலவும் KH என்ற வார்த்தைகளுடன் அழகாக டிசைன் செய்யப்பட்டு இருந்தது.

    அனைவருக்கும் கதர்

    அனைவருக்கும் கதர்

    ஏற்கனவே வாக்குறுதி கொடுத்தது போல அனைத்து போட்டியாளர்களுக்கும் வித விதமான ஃபேஷன் உடைகளாக கதர் ஆடைகளை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். மேலும், இந்த கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியிலே அதை அணிந்து வந்து அமர வேண்டும் என்றும் ஷெரின் வந்த கேப்பி அவர்களுக்கு பிரேக் கொடுத்தார்.

    கதரிலும் ஃபேஷன்

    கதரிலும் ஃபேஷன்

    தாத்தா கால உடைகளாக மட்டுமே கதர் ஆடை இருக்கும் என்கிற எண்ணத்தை மாற்றி டிரெண்ட் செட்டராக கதர் ஆடையும் எதிர்காலத்தில் இந்தியாவில் மக்கள் பயன்பாட்டி வரும் என நம்பிய கமல்ஹாசன், அனைவருக்கும் கதர் ஆடையை கொடுத்திருந்தார். ஹவுஸ்மேட்கள் கதர் ஆடையை அணிந்து கொண்டு சூப்பராக கலக்கினர்.

    தறி கெட்டுப் போகக்கூடாது

    தறி கெட்டுப் போகக்கூடாது

    இது நம்ம பாரம்பரிய உடை, கதர் ஆடைகளை மெஷின் உருவாக்கவில்லை. கைத்தறி நெசவாளர்கள் கஷ்டப்பட்டு உருவாக்குகிறார்கள். தறி கெட்டுப் போகக் கூடாது என்கிற வார்த்தைக்கு அர்த்தமே எனக்கு தாமதமாகத்தான் புரிந்தது. இளைஞர்களும் கதர் ஆடைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

    English summary
    Kamal Haasan announced a new brand named KH for Khadar dress and he gave new Khadar dresses to all housemates.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X