இந்த வாரமும் முதலில் சேவ் ஆனது ஆரி தான்.. சிலருக்கு எரியுமா? எரியாதா? போங்க கமல் சார்!

சென்னை: வார வாரம் முதல் ஆளாக ஆரியை கமல் சேவ் செய்வதும், மற்ற போட்டியாளர்கள் எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.

எப்படித்தான் ஆரி முதலில் சேவ் ஆகிறார் என இந்த வாரம் பாலா, ஆஜீத் மற்றும் ஹவுஸ்மேட்களான ஷிவானி மற்றும் ரியோவுடன் புலம்பிய அன்சீன் வைரலான நிலையில், மீண்டும் ஆரி முதல் ஆளாக சேவ் ஆனதும், பாலா ரசிகர்களை ஆரியின் ஆர்மியினர் கலாய்த்து வருகின்றனர்.

நேர்மையின் சின்னம்

நேர்மையின் சின்னம்

சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது ஆரியை நேர்மையின் சின்னம் என பாராட்டினார். ஜித்தன் ரமேஷும் வெளியேறும் போது ஆரியை பாராட்டினார். அர்ச்சனா வெளியேறும் போது தனது எவிக்‌ஷனுக்கு ஆரி தான் காரணம் என்பது போல ரியோ, சோமுக்கு குறிப்பால் உணர்த்தி சென்றார்.

எவிக்‌ஷனுக்கு நாமினேஷன்

எவிக்‌ஷனுக்கு நாமினேஷன்

வார வாரம் பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய எதிரியாக ஆரியை பார்த்து வருகின்றனர். அதனால், அவரை விடாமல் நாமினேட் செய்து வருகின்றனர். அதிலும், அன்பு கேங்க் அதை ஒரு வேலையாகவே செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், ஆரி கொஞ்சமும் கலங்கவில்லை.

தப்பை ஒத்துக் கொள்கிறார்

தப்பை ஒத்துக் கொள்கிறார்

தான் தப்பே செய்ய மாட்டேன் என ஆரி சொல்வதில்லை. அது போல தான் ஏதும் தப்பு செய்திருந்தால் அதனை தாராளமாக ஒப்புக் கொள்கிறார். ஆனால், மற்றவர்களின் தவறை சுட்டிக் காட்டினால் மட்டும் அவர் வில்லன் ஆக்கப்படுவது தான் ஏன் என வெளியே நிகழ்ச்சியை பார்க்கும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.

தனியாக

தனியாக

கமல் சார் எபிசோடில் பிரேக் விடும் போது, அன்பு கேங் டோட்டலாக எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். அனிதா சம்பத், பாலா, ஷிவானி, ஆஜீத் மற்றும் ரம்யா ஆகியோர் பேசிக் கொண்டிருக்கும் போது தனியாக அவர்கள் அருகே அமர்ந்து கொண்டு, பேச யாருமே இல்லாத நபராய் இந்த 83 நாட்களை பிக் பாஸ் வீட்டில் எப்படித்தான் கழித்து வருகிறாரோ தெரியவில்லை.

முதலில் சேவ்

முதலில் சேவ்

இந்நிலையில், இன்றைய எபிசோடில் முதல் ஆளாக ஆரி அர்ஜுனனை கமல்ஹாசன் சேவ் என சொன்னதும் ஆரி தனது ரசிகர்களுக்கு ரொம்பவே நன்றி சொல்லி அமர்ந்தார். ஆனால், ஆரி முதல் ஆளாக சேவ் ஆனது ரம்யா, பாலா, ரியோ உள்ளிட்ட மத்த ஹவுஸ்மேட்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ரம்யா கணக்கு

ரம்யா கணக்கு

ஆரி முதல் ஆளாக சேவ் என மீண்டும் கமல் சொன்னது சிலருக்கு எரிச்சலை நிச்சயம் கிளப்பி இருக்கும். அடுத்த வாரம் ஆரி கேப்டன் என்பதால், அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது. அதனால், இன்னமும் அவரை கேப்டன் பதவியில் இருக்கும் போது டார்ச்சர் பண்ண பிளான்கள் நடக்கும். ஆரி இந்த வாரம் வெளியேறுவார் என ரம்யா போட்ட கணக்கும் கடைசியில் மிஸ் ஆகிப் போனது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X