அச்சச்சோ.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கமல்ஹாசன்.. அதிரடியாக வெளியான அறிவிப்பு!

சென்னை: வரும் பிக் பாஸ் சீசன் 8ஐ தொகுத்து வழங்கப்போவதில்லை என கமல்ஹாசன் அதிரடியாக தற்போது அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியையே ரசிகர்கள் கமல்ஹாசனுக்காக பார்த்து வரும் நிலையில், அவர் இந்த முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என அறிவித்துள்ளது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

7 வருடங்களுக்கு முன்பாக பிக் பாஸ் முதல் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கப் போவதாக கூறும்போது, பலரும் கமல்ஹாசனுக்கு சினிமா வாழ்க்கை முடிந்து விட்டது. அதனால், தான் டிவி ஷோவில் தொகுப்பாளராக மாறிவிட்டார் என கலாய்த்து வந்தனர்.

Bigg Boss Tamil Kamal Haasan Bigg Boss Tamil 8

இந்தியன் 2 படம் பிக் பாஸ் முதல் சீசனில் ஆரம்பிக்கப்பட்டு 7வது சீசன் முடிந்தவுடன் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சகலகலா வல்லவன்: உலக நாயகன் கமல்ஹாசன் நிஜமாகவே சகலகலா வல்லவன் தான். ரசிகர்களை டிவியில் சென்று சந்திக்க வேண்டுமென்றாலும், ஸ்மார்ட்போனில் அவர்களின் கைகளுக்குள் சென்று சந்திக்க வேண்டும் என்றாலும் தான் தயார் என பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். பல சர்ச்சைகள், பல தொல்லைகள் வந்த நிலையிலும், தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டே சினிமாவிலும் நடித்து வந்தார்.

சினிமா, அரசியல், சின்னத்திரை: ஒரு பக்கம் விக்ரம் படத்தில் நடித்துக் கொண்டும், இன்னொரு பக்கம் அரசியல் நடத்திக் கொண்டும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக வெள்ளிக்கிழமையே இவிபி பிலிம்சிட்டிக்கு பறந்து வந்துவிடுவார் கமல்ஹாசன். இந்த வயதிலும் இப்படி சுழன்றுக் கொண்டிருந்த கமல்ஹாசன் கடந்த சீசன் சரியாக நிற்கக் கூட முடியாமல் நாற்காலி எல்லாம் போட்டு அமர்ந்துக் கொண்டே நிகழ்ச்சியை நடத்தினார்.

Bigg Boss Tamil Kamal Haasan Bigg Boss Tamil 8

பிக் பாஸ்க்கு குட் பை: கடந்த சீசனில் கமல்ஹாசன் மாயாவுக்கு ஃபேவரைட்டாக செயல்பட்டு வந்தார் என கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் அதிகளவில் கமல்ஹாசன் மீது நெட்டிசன்கள் அடுக்கினர். கமல்ஹாசன் அடுத்த சீசனை தொகுத்து வழங்கக் கூடாது என்றும் கண்டனங்கள் கிளம்பின. ஆனாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என அவரது ரசிகர்கள் உறுதியுடன் இருந்து வந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

என்ன காரணம்: தக் லைஃப், கல்கி 2, இந்தியன் 3 என வரிசையாக கமல்ஹாசன் கைவசம் படங்கள் இருப்பதால், சினிமா ஷூட்டிங்கிற்காக தன்னால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் பங்கேற்க முடியவில்லை என்றும் பிக் பாஸ் ரசிகர்களுக்கும், போட்டியாளர்களுக்கும் விஜய் டிவிக்கும் நன்றி என அறிக்கை ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Tamil Kamal Haasan Bigg Boss Tamil 8

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X