Don't Miss!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எவிக்ஷனுக்கும் பிரேக்கிங் நியூஸ் போட்ட கமல்.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார்?
சென்னை: அபிஷேக் ராஜா, வருண் மற்றும் அபிநய் கடைசி மூன்று இடங்களில் உள்ள 3வது புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறினார் என்கிற தகவலும் கசிந்துள்ளது.
தன்னிகரில்லாத் தலைவி… செல்வி ஜெயலலிதாவின் நினைவுதினம் இன்று!

முழிக்கும் மூன்று பேர்
இந்த வாரம் குறைவான ஓட்டுக்களை வாங்கி கடைசி இடத்தில் அபிஷேக், வருண் மற்றும் அபிநய் இடம்பிடித்துள்ளது மூன்றாவது புரமோவில் ரிவீலாகி உள்ளது. இந்த மூவரில் ஒருவர் தான் இன்று இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளார்.

பெரிய இடத்து பிள்ளைகள்
கமல் சார் என்ன தான் பெரிய இடத்து பிள்ளைகளுக்கு டிப்ஸ் கொடுத்து காப்பாற்ற நினைத்தாலும், வெளியே அவர்களுக்கான ஓட்டு வங்கி அதள பாதாளத்தில் உள்ளது என்பது வருண் மற்றும் அபிநய் மீண்டும் கடைசி இடத்தில் சின்னப் பொண்ணு சென்ற வாரத்தில் இருந்தது போலவே இருப்பதை தெளிவாக காட்டுகிறது.

பர்ஃபார்ம் பண்ணும் வருண்
பிக் பாஸ் வீட்டில் வருண் நல்லாவே பர்ஃபார்ம் பண்ணி வந்தாலும், இமான், தாமரை, அக்ஷரா, பாவனி, பிரியங்கா எல்லாம் சேவ் ஆன பின்னர் கடைசி மூன்று இடத்தில் உள்ளது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. அடுத்த வாரம் வருண் இந்த டேஞ்சர் ஸோனில் இருந்து தப்பிக்க என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம்.

அடுத்த வாரமாவது அபிநய்
மற்றும் அபிநய் என ஒட்டுமொத்த பிக் பாஸ் ஹவுஸும் ரசிகர்களும் கலாய்த்து வந்தாலும், தொடர்ந்து விளிம்புக்கு வந்தும் வெளியேறாமல் ஏதோ ஒரு சக்தியின் காரணமாக காப்பாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார். அடுத்த வாரமாவது அவரை வெளியே அனுப்புவார்களா இல்லை கடைசி வரை இப்படியே ஃபுட் போர்ட் அடிக்க வைத்தே காப்பாற்றுவார்களா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

இதுக்கு பருத்தி மூட்டை
வந்தான் ஆர்பாட்டம் பண்ணான்.. நாமினேட் ஆனான்.. எவிக்ட் ஆனான்.. மறுபடியும் வந்தான்.. ஆர்பாட்டம் பண்ணான்.. நாமினேட் ஆனான்.. எவிக்ட் ஆனான் ரிப்பீட் என இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரேக்கிங் நியூஸ் போடப்பட்டு அபிஷேக் வெளியேற போவதை அறிந்து கொண்ட ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சிறப்பான ஆட்டம்
அபிஷேக் ராஜாவை மறுபடியும் பிக் பாஸ் டீம் அழைக்கும் போதே யோசித்து இருக்க வேண்டும். மீண்டும் நம்மை வச்சு செய்யவே கூப்பிடுகின்றனர் என்பதை, ஆனால், ஆசை யாரை விட்டது வீணாக வலையில் வந்து மாட்டிக் கொண்டார். இந்த வாரம் பிரேக்கிங் நியூஸ் வாசித்து சிறப்பான ஆட்டத்தையும் பங்களிப்பையும் கொடுத்து பெஸ்ட் பர்ஃபார்மரான அபிஷேக் ராஜா அதே பிரேக்கிங் நியூஸ் மூலம் வெளியேற்றப்படுவதை எண்ணி ஏகப்பட்ட ரசிகர்கள் ஃபீல் செய்து வருகின்றனர்.