பிக் பாஸ் அல்டிமேட் பிரம்மாண்ட துவக்க விழா எப்போது தெரியுமா? வெளியானது புதிய புரமோ!
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்க விழா எப்போது என்பது குறித்த அதிரடியான அப்டேட் தற்போது புதிய புரமோவுடன் வெளியாகி உள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் இந்த பிக் பாஸ் அல்டிமேட்டையும் ஹோஸ்ட் பண்ண காத்திருக்கிறார்.
இன்று முதல் போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் துவக்க விழாவுக்கான ஷூட்டிங் ஆரம்பம் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

5வது சீசன் முடிந்தது
கடந்த ஜனவரி 16ம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. ராஜு ஜெயமோகன் மக்கள் எதிர்பார்த்தபடியே பிக் பாஸ் டைட்டில் மற்றும் ரூ. 50 லட்சம் பணத்தை வென்றார். அதே நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் முன்னிலையில், பிக் பாஸ் அல்டிமேட் அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார்.

கமல் தான் ஹோஸ்ட்
இந்தியில் பிக் பாஸ் ஒடிடியை சல்மான் கானுக்கு பதிலாக கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய நிலையில், தமிழிலும் ஹோஸ்ட் மாறுவாரா? என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், கமல்ஹாசன் டிஜிட்டலிலும் தானே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக அதிரடியாக அறிவித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

பழைய போட்டியாளர்கள்
பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து 5வது சீசன் வரையில் கலந்து கொண்ட பிரபல போட்டியாளர்களே இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போகின்றனர் என்றும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சினேகன், பரணி, ஓவியா, வனிதா விஜயகுமார், தாமரை செல்வி, ஜூலி என ஏகப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் ரசிகர்களை குதூகலப்படுத்த காத்திருக்கின்றனர்.

ஃபுல் டைம் என்டர்டெயின்மென்ட்
70 நாட்கள் 16 போட்டியாளர்களுடன் நடைபெற உள்ள இந்த பிக் பாஸ் அல்டிமேட் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாக போவது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களுக்கு நாள் முழுவதும் பிக் பாஸ் பிரபலங்கள் என்ன செய்றாங்க, எப்படி சண்டை போடப் போறாங்க, இதில் யார் ஜெயிப்பார், என ஃபுல் டைம் என்டர்டெயின்மென்ட் காத்திருக்கும்

எப்போ ஆரம்பம்
பிக் பாஸ் அல்டிமேட்டின் ஷூட்டிங் இன்று ஆரம்பமாகி உள்ளதாகவும் போட்டியாளர்களின் நடன நிகழ்ச்சிகள் தற்போது இவிபி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் செட்டில் அரங்கேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வரும் ஜனவரி 30ம் தேதி மாலை 6.30 மணி முதல் பிக் பாஸ் அல்டிமேட்டின் பிரம்மாண்ட துவக்க விழா நடைபெற போவதாக கமல் அறிவிக்கும் புதிய புரமோவும் தற்போது வெளியாகி உள்ளது.

டபுள் ட்ரீட்
குக் வித் கோமாளி இந்த வாரம் தொடங்க உள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் ஆரம்பமாகிறது. விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரை தாண்டி ரசிகர்களின் கவனம் வேறு எங்கும் செல்லாத வகையில் டபுள் ட்ரீட் காத்திருக்கிறது. சன் டிவி, ஜீ தமிழ் டிவி எல்லாம் போட்டிக்கு வேறு நிகழ்ச்சியை எப்போது களமிறக்கப் போகின்றனர் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











