எப்போ தாத்தா ஆவீங்க... கமலின் வேற லெவல் பதிலால் உற்சாகமான ரசிகர்கள்
சென்னை : நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்த கமல், ஒவ்வொரு போட்டியாளரையும் சிறப்பாக எதிர்கொண்டார்.
அப்போது சுரேஷ் சக்ரவர்த்தி கேட்ட கேள்விக்கு கமல் அளித்த பதில் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸில் இதுவரை நடந்து முடிந்துள்ள 5 சீசன்களையும் சிறப்பான வகையில் தொகுத்து வழங்கினார். கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்ட நிலையிலும் ரம்யா கிருஷ்ணன் ஒரேயொரு நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்கினார். அடுத்த நிகழ்ச்சியிலேயே கமலை பார்க்க முடிந்தது.

பிக் பாஸ் கமல்
அந்த அளவிற்கு பிக் பாஸ் என்றால் அது கமல்தான் என்று ஆகிவிட்டது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு துவங்கியுள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட்
இதில் வனிதா விஜய குமார், அபிராமி உள்ளிட்ட கடந்த 5 சீசன்களின் போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி இந்த நிகழ்ச்சியும் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு துவங்கிய இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்திய கமல்ஹாசனின் கேள்விகளுக்கும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் சிறப்பான பதில்கள் பகிரப்பட்டன.

சுரேஷ் சக்ரவர்த்தி கேள்வி
இதனிடையே நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்தியை அறிமுகம் செய்தார் கமல். அப்போது சுரேஷ், கமலிடம் அவர் எப்போது தாத்தா ஆவார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கமல் இதற்கு தனது மகள் ஸ்ருதிஹாசன் தான் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தியன் படத்திலேயே தாத்தாதான்
இதையடுத்து பேசிய சுரேஷ் சக்ரவர்த்தி, கமல் எப்போது திரைத்துறையில் தாத்தாவாக போகிறார் என்று அடுத்த கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த கமல், இந்தியன் படம் வெளியானவுடனேயே தன்னை தாத்தா என்று அனைவரும் அழைக்க துவங்கியதாக தெரிவித்தார்.

விக்ரம் பட ரிலீஸ்
இதையடுத்து கமலின் நடிப்பில் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு என்ன படம் கிடைக்கும் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விக்ரம், இந்த ஆண்டு விக்ரம் திரைப்படம் கிடைக்கும் என்று பதிலளித்தார். விக்ரம் படத்தின் சூட்டிங் இன்னும் நிறைவடையாத நிலையில், கமல் கொடுத்த இந்த உறுதி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











