புத்தாண்டு அதுவுமா புது ஜோடிக்கு விருந்து வைத்த கமல்ஹாசன்.. யாரெல்லாம் கூட இருக்காங்க பாருங்க!
சென்னை: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கமல்ஹாசன் தெரிவித்த நிலையில், கோலிவுட்டின் புது ஜோடியான சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் கமல்ஹாசன் உடன் உணவு உண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் சித்தார்த் நடித்துள்ள நிலையில், தக் லைஃப் படத்திலும் அவர் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கமல்ஹாசன், சித்தார்த், அதிதி ராவ் மட்டுமின்றி இந்த லஞ்ச்சில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மற்றும் தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களும் பங்கேற்றுள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

அடுத்ததாக ஏதோ ஒரு பிரம்மாண்ட விஷயத்தை கமல்ஹாசன் செய்யப் போகிறாரா என எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
புது ஜோடி: சமீபத்தில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் தாங்கள் என்கேஜ்ட் என பதிவு போட்டிருந்தனர். மகா சமுத்திரம் படத்துக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் இணை பிரியா ஜோடிகளாக டேட்டிங் செய்து வந்த நிலையில், நிச்சயமும் செய்துக் கொண்டனர். விரைவில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொள்ளப் போகின்றனர்.

கமலுடன் லஞ்ச்: சித்தார்த் மற்றும் அதிதி ராவுக்கு நடிகர் கமல்ஹாசன் லஞ்ச் வழங்கிய புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. அவர்களுடன் பல முன்னணி பிரபலங்களும் பங்கேற்றுள்ளது தான் இதில் ஹைலைட்டாகவே பார்க்கப்படுகிறது.
மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான்: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இந்தியன் 2 படத்தில் வேலை செய்யவில்லை என்றாலும் தக் லைஃப் படத்தில் பணியாற்றி வருகிறார். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் காட்சிகள் புகைப்படங்களாக வெளியாகி உள்ளன.
கிராவிட்டி பட இயக்குநர்: கூடவே மெக்ஸிகன் இயக்குநரான அல்ஃபோன்ஸோ குரான் இவர்களுடன் இணைந்து உணவு உண்ணுவதை பார்த்த ரசிகர்கள் என்ன பாஸ் நடக்கிறது என கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். கிராவிட்டி, ரோமோ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்தவர் தான் அல்ஃபோன்ஸோ குரான். இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ள நிலையில், விரைவில் அனிருத் இசையில் பாடல்களும் அட்டகாசமான டீசர் உள்ளிட்ட அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











