Kamal haasan : வில்லனாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட கமல்ஹாசன்… அதிர்ந்து போன படக்குழு!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படத்தில் வில்லனாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு விக்ரம் படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார், இதில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹகத் பாசில்,காயத்ரி சங்கர் நடித்திருந்தனர்.

விக்ரம் அதிரடி ஹிட்: விக்ரம் திரைப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து அதிகளவு லாபத்தை ஈட்டியதால், பல திரைப்படங்களை தயாரிக்க முன் வந்துள்ளது. சிம்புவின் 48வது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். அதே போல, சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இணைந்து நடிக்கும் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ்: இதையடுத்து, கல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளார். இப்படத்தை, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னலுடன் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட் மூவீஸும், இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது.

ரசிகர்கள் பிஸி: இப்படி அடுத்தடுத்த படங்களால் பிஸியாக இருக்கும் கமல்ஹாசனுக்கு டோலிவுட்டில் வாய்ப்பு தேடி வந்துள்ளது. டோலிவுட்டில் ஸ்டார் நடிகரான பிரபாஸ் நடித்து வரும் புராஜெக்ட் கே படத்தில், பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க, நடிகர் கமல்ஹாசனை அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
150 கோடி சம்பளம்: கமலுக்கு கதை பிடித்துப்போனதால், படத்திற்கு ஓகே சொன்ன கமல், புராஜெக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்க ரூ.150 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். மேலும், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. புராஜெக்ட் கே படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











