For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  முதல் ஆளா பிளான் பண்ண வேண்டியதே நீங்கதான் ஷிவானி.. வெளியே போனா என்ன பண்ணுவீங்கன்னு கேட்ட கமல்!

  |

  சென்னை: பிக் பாஸ் சீசன் 4 இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய உள்ள நிலையில், போட்டியாளர்கள் வெளியே சென்றதும் என்ன பண்ணுவீங்கன்னு கமல் கேட்கும் அசத்தல் புரமோ வெளியாகி உள்ளது.

  சென்னை: பாடி மசாஜ் வேணும்... சிணுங்கிக் கொண்டே சொன்ன ரம்யா பாண்டியன்..!

  சனிக்கிழமை புரமோ ரொம்ப லேட் ஆன நிலையில், இன்றைய புரமோ சரியான நேரத்தில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

  ஆவேசமாய் தரையை தட்டிய ஆரி.. சின்ன மம்மிதான் ஞாபகத்துக்கு வர்றாங்க.. வேற லெவல் காட்டிய நெட்டிசன்ஸ்! ஆவேசமாய் தரையை தட்டிய ஆரி.. சின்ன மம்மிதான் ஞாபகத்துக்கு வர்றாங்க.. வேற லெவல் காட்டிய நெட்டிசன்ஸ்!

  முதல் கேள்வியாக கமல் ஷிவானியை கேட்டபோதே, இந்த வாரம் அவர் தான் வெளியேறுகிறார் என்பது உறுதியாகி விட்டது.

  முடியப் போகுது

  முடியப் போகுது

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நடக்குமா? நடக்காதா? என்கிற கேள்விகள் இருந்த நிலையில், தற்போது கிராண்ட் ஃபினாலேவை நோக்கி ஷோ வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 முடியப் போகுது. சமூக வலைதளங்களில் கிட்டத்தட்ட 100 நாட்களாக இருந்த பரபரப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடங்கப் போகிறது.

  உங்க பிளான் என்ன

  உங்க பிளான் என்ன

  இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள முதல் புரமோவில், இன்னும் ஒரு வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடியப் போகும் நிலையில், போட்டியாளர்களை பார்த்து கமல், நீங்க வெளியே போனதும் பல கனவுகள் வச்சிருப்பீங்க என பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு போட்டியாளர்களின் பிளான் என்ன என்று கேட்கும் கமல், முதல் ஆளாக ஷிவானியிடம் இருந்து ஆரம்பிக்கிறார்.

  மொக்கை பதில்

  மொக்கை பதில்

  பிக் பாஸ் வீட்டில் தான் இத்தனை நாட்கள் மிக்சர் தின்னுட்டு இருந்தார் ஷிவானி என கிண்டல் செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் வெளியே போகப் போற ஷிவானி, நானா.. எதுவுமே பிளான் பண்ணல சார்.. என இதற்கும் மொக்கை பதிலை சொல்லி நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

  பாலாவின் கோவா பிளான்

  பாலாவின் கோவா பிளான்

  கமல் சார் கேட்டதுக்கு சரியான பதிலை பாலா தான் சொன்னார் என தெரிகிறது. இந்த வீட்ல இருந்த ஸ்ட்ரெஸ்ஸை தணிக்க கோவாவுக்கு சென்று செம பார்ட்டி டூர் பண்ணாதான் பழைய பாலாவா மாறுவேன்னு அவருக்கே தெரிந்திருக்கு, உங்க பிரெண்ட் ஷிவானியையும் கூட்டிட்டு போவீங்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  பாடி மசாஜ்

  பாடி மசாஜ்

  96 நாட்கள் சிரித்தே சமாளித்த ரம்யாவை, கடைசியா சிங்கப்பெண் பாட்டுப் போட்டு உசுப்பேத்தி விட்டு பெண்டை நிமித்திட்டாங்க, வீட்டுக்குப் போனதும், ஒரு நல்ல பாடி மசாஜ் செய்ய போறேன் சார் என ரம்யா பாண்டியன் சிரித்துக் கொண்டே தனது பிளானை கமலுக்கு சொன்னார்.

  சோமின் பிளான்

  சோமின் பிளான்

  தனது செல்ல நாய்க்குட்டியை வாக்கிங் கூட்டிட்டுப் போவேன் சார் என டிக்கெட் டு ஃபினாலேவை வென்ற சோமசேகர் தனது பிளான் அது தான் என கமலுக்கு எடுத்துரைத்தார். கேபியோ, ரியோவோ நேற்றே சேவ் ஆகவில்லை என சோம் ஃபீல் பண்ணதுக்காக நெட்டிசன்கள் அவரை நொங்கெடுத்து வருவது வேறு கதை.

  குழந்தையோடு விளையாடுவேன்

  குழந்தையோடு விளையாடுவேன்

  பிக் பாஸ் வீட்டுக்குள் குழந்தை வரும் போது டாஸ்க்கை கடைபிடிக்க வேண்டும் என சிலையாக நின்ற ஆரி அர்ஜுனன், வீட்டுக்குப் போனதும் கொஞ்ச நாட்கள் குழந்தையுடன் தனது நேரத்தை செலவழிக்க திட்டமிட்டு இருக்க்கேன் என கமல் சாரிடம் கூறினார். ஆரியின் பாசத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

  சோறு தான் முக்கியம்

  சோறு தான் முக்கியம்

  கடைசியா பதில் சொன்ன ரியோ ராஜ், வீட்டுக்குப் போன உடனே நல்லா சாப்பிட்டுட்டு, ஒன் ஹவர் ரெஸ்ட் எடுத்துட்டு வண்டியை எடுத்துட்டு கிளம்பிடணும், ஏதாவது காட்டுக்கு போயிடணும் சார் என்றார். பிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே பிரியாணிக்கு அலைந்தது போதாது என்று வீட்டுக்குப் போனதும் சாப்பாடு தானா? குழந்தையை கொஞ்ச மாட்டீங்களா என்றும் ஜாலியாக ரியோவை கலாய்த்து வருகின்றனர்.

  கேபியை காணோம்

  கேபியை காணோம்

  பிக் பாஸ் வீட்டில் இருப்பதே 7 பேர் தான். பிக் பாஸ் எடிட்டர், இன்றைய முதல் புரமோவில், கேபி என்ன பிளான் சொன்னார் என்றே காட்டவில்லை. இது நிச்சயம் கேபியின் ரசிகர்களை வெகுவாக அப்செட் ஆக்கியிருக்கும். இன்றைய ஃபோகஸ் ஃபுல்லா ஷிவானி பக்கம் தான் போல, நடத்துங்க என்று நெட்டிசன்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.

  English summary
  Kamal Haasan asking about dream plans after Bigg Boss to the contestants. Shivani told she didn’t decide anything about that, Bala revealed about his Goa plan.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X