ஆரிக்கு பாராட்டு.. அர்ச்சனா அண்ட் கோவுக்கு வேட்டு.. 4வது புரமோவில் வெளுத்து வாங்கிய கமல்!

சென்னை: என்னடா கமல் சார் ஆரி பத்தி பேசலயே என நினைத்த ரசிகர்களுக்கு அட்டகாசமான 4வது புரமோ இப்போ வெளியாகி இருக்கு.

போரிங் போட்டியாளர்னு ஆரியை எப்படி முடிவு பண்ணீங்கன்னு அர்ச்சனா அண்ட் கோவை கமல் வெளுக்கும் புரமோவை பார்த்த ரசிகர்கள் ஆரியை போல சிரித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் போலி பாசத்தை காட்டி ஒரு குரூப்பை வளர்த்துக் கொண்டு அர்ச்சனா செய்யும் சேட்டைக்கு இன்னைக்கு ஒரு சாட்டை இருக்கும் என தெரிகிறது.

பாப்கார்ன் சாப்பிட்டுகிட்டு

பாப்கார்ன் சாப்பிட்டுகிட்டு

இன்றைய முதல் புரமோவில் காக்கி கலர் கோட்டை மாட்டிக் கிட்டு, டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் உலகநாயகன் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே மெகா சீரியல் ஒன்றை பார்ப்பது போல பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து விட்டு, உள்ளேயும் ஒரு அரசியல் இருக்கு என ஆரம்பமே அசத்தினார்.

சுமங்கலி மேட்டர்

சுமங்கலி மேட்டர்

இரண்டாவது புரமோவில் மொட்டை தாத்தா சுரேஷுக்கும் அவருக்கும் கூஜா தூக்குன ரியோ மற்றும் அர்ச்சனாவுக்கும் ஆப்பு அடிக்கப்பட்டது. ஷிவானி நாராயணன் அனிதா சம்பத் பேசியது சரின்னு சொல்றதை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி. இரண்டு கையால கை தட்டி பாராட்டின கமல், எப்ப தான் பேசுறது என சுமங்கலி மேட்டருக்காக அனிதாவுக்கு ஆரத்தி எடுத்தார்.

அர்ச்சனாவுக்கு குட்டு

அர்ச்சனாவுக்கு குட்டு

நல்லா தீப்பொறி பறந்துட்டு இருந்தப்போ, பாசத்தை காட்டி தண்ணி ஊத்தி அணைச்சி இணைஞ்சிட்டாங்களே.. எனக்கு சந்தோஷமா இருந்தது. ஆடியன்ஸுக்கு எப்படி இருந்ததுன்னு தெரியலயே என செம ட்விஸ்ட் கொடுத்துள்ளார். மூன்றாவது புரமோவில் ரியோவை கழட்டி விட்டு கேம் ஆடும் அர்ச்சனாவுக்கு குட்டு வைத்துள்ளார்.

ஆரிக்கு பாராட்டு

ஆரிக்கு பாராட்டு

நடிகர் ஆரியிடம் அகம் டிவி வழியே பேசிய கமல்ஹாசன், ஆரி, இந்த வாரமும் உங்களுக்கு கண்ணாடி அறை வாய்த்ததா? என கேட்க, ஆளே மாறி ஹேப்பி மோடில் இருக்கும் ஆரி, வாய்க்கப்பட்டது என பளீச்சென பதில் சொல்ல அர்ச்சனா அக்கா ஃபேஸ் அப்படியே தக்காளி பழம் போல சிவந்தது.

அர்ச்சனா அண்ட் கோவுக்கு வேட்டு

அர்ச்சனா அண்ட் கோவுக்கு வேட்டு

ஆரியை எப்படி போரிங் போட்டியாளர் என தேர்வு செய்தீர்கள் என கேட்டதும், அர்ச்சனா அக்கா உடனே டக்குன்னு எந்திரிச்சு, அதிக ஓட்டு அடிப்படையில் முடிவு பண்ணோம் என்றார். யார் யார் சொன்னீங்க என்று கேட்டவுடன், ஹவுஸ்மேட்கள் பம்ம, இந்த குழப்பத்தில் தான் தேர்வு பண்றீங்களா என அர்ச்சனா அண்ட் கோவுக்கு கமல் வேட்டு வைத்த புரமோ வெளியாகி தீயாக பரவி வருகிறது.

இது போதும் தலைவா

இது போதும் தலைவா

நடிகர் ஆரிக்கு ஆதரவாக நேற்றே இந்திய அளவில் ஹாஷ்டேக் டிரெண்டாகி அவரது நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில், கமல் சாரும் ஆரியின் செயலுக்கு பாராட்டுவார் என்பதை அறிந்த உடனே இது போதும் தலைவா என்றும் முதலில் இந்த பிக் பாஸ் வீட்டில் குரூபிசம் மற்றும் ஃபேவரிசம் பண்ணுபவர்களை பிரித்து விடுங்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X