ஷிவானியும் பாலாவும் தான் அண்ணன் தங்கையா நடிச்சாங்க.. சனம்க்கு என்ன சொல்ல வராரு கமல்?
சென்னை: பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில், பாலாவை தன் மகனாக ஏற்று நடிக்க மாட்டேன் என அடம்பிடித்த சனம் ஷெட்டிக்கு, சரியான பாடம் புகட்ட, வேறு ஒரு யுத்தியை கமல் கையாண்டது ரசிகர்களை ரொம்பவே குழப்பி விட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏகப்பட்ட போட்டிகள் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்றது.
லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக இந்த வாரம் பாட்டி சொல்லைத் தட்டாதே டாஸ்க் மேஜர் ஒன்றாக அரங்கேறியது.

சிறப்பாக இல்லை
ஆனால், கடந்த வாரங்களில் நடைபெற்ற அளவுக்கு இந்த லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான பாட்டி சொல்லைத் தட்டாதே முழுமையாகவும் சுவாரஸ்யமாகவும் நடைபெறவே இல்லை. அதற்கு முழு காரணமும் பாலாஜி முருகதாஸ் தான் என்றே சொல்லலாம். சிறப்பாக செல்ல வேண்டிய ஒரு டாஸ்க்கை சொதப்பி விட்டார்.

பாலாஜி மட்டுமா
அதே போல, பாட்டி சொல்லைத் தட்டாதே டாஸ்க்கில் பாலாஜி மட்டுமா சொதப்பினார் என்றால், அப்படி சொல்லி விட முடியாது. சனம் ஷெட்டி தான் பாலாஜி முருகதாஸுக்கு அம்மாவாக நடிக்கவே முடியாது என அடம்பிடித்தது. ஷிவானிக்கு அத்தை மகனாகவும், ஆஜீத்தை விரும்பும் அத்தை மகளாக ஷிவானியும் கூட அந்த டாஸ்க்கை சிறப்பாக செய்யவில்லை.

நடிக்கவே மாட்டேன்
பாலாஜி முருகதாஸ் ஒரு பக்கம் அந்த லக்சரி பட்ஜெட் டாஸ்க்குக்கு வேட்டு வைத்தார் என்றால், மறு புறம் பாலாவுக்கு அம்மாவா தான் நடிக்கவே மாட்டேன் என சனம் ஷெட்டி பண்ண அடம் குறித்து கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார். அது தொடர்பாக பேசிய சனம் தனக்கு ரொம்ப டிஸ்டர்ப் ஆக இருந்தது என்றார்.

அண்ணன் தங்கச்சி
சனம் ஷெட்டிக்கு பதில் சொல்லும் விதமாக கமல் சொன்ன கதை தான் செம ட்விஸ்ட் கொண்டது. பாலாஜியும் ஷிவானியும் கூடத்தான் அண்ணன், தங்கையாக நடித்தனர் என சொன்ன கமல், அங்க அப்படியே ஒரு பிரேக் போட்டு, சிவாஜியும் சாவித்ரியும் பாசமலர் படத்தில் அண்ணன் தங்கச்சியாக நடித்தார்கள். நவராத்திரி படத்துல ஹீரோ ஹீரோயினா நடிச்சாங்க, இது வெறும் நடிப்பு மட்டும் தான் என பேசி எல்லோரையும் ஆட்டம் காண வைத்தார்.

மீண்டும் ஆரம்பமாகுமா
அண்ணன் தங்கச்சி என்று வாய் வார்த்தைக்கு சொன்னால் கூட அவங்க ரெண்டு பேரும் போட்ட ஆட்டமே வேறு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். கமலும் அதை சுட்டிக் காட்டவே தான் அவர்களை இழுத்து விட்டு சனம் ஷெட்டிக்கு உரைக்கும் படி விளக்கினார். மீண்டும் ஷிவானி பாலா காதல் கதை பிக் பாஸ் வீட்டில் ஆரம்பமாகுமா? என்கிற கேளிவியையும் கமல் கொளுத்திப் போட்டு இருக்கிறாரோ என்றும் ரசிகர்கள் சந்தேகிக்க தொடங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications











