விஜய்யை ஆட்சி அமைக்க கூப்பிட முடியுமா? முடியாதா? ரௌத்திரத்தில் கமல்ஹாசன்.. மாஸ் பண்றாப்ல!

சென்னை: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்றுள்ளதால் அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மே 7ஆம் தேதி விஜய் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், தவெகவுக்கு 118 என்ற பெரும்பான்மை ஆதரவு இல்லை என்று பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் உள்ளார். ஆனால் தனக்கான பெரும்பான்மையை விஜய் சட்டமன்றத்தில் நிரூபித்தால் போதுமானது.

அப்படி இருக்கையில் அவரை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்காமல் இருப்பது, தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கமல்ஹாசனின் எக்ஸ் பதிவில், " தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது. என் சகோதரர் திரு. மு.க. ஸ்டாலின் 'மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்' என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன். இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.

Kamal Haasan Backs Vijay on Government Formation Delay Says Majority Must Be Proven in Assembly Not Raj Bhavan

அவமானம்: திரு. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.

Kamal Haasan Backs Vijay on Government Formation Delay Says Majority Must Be Proven in Assembly Not Raj Bhavan

சட்டமன்றத்தில்: 'பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல' என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும். - கமல் ஹாசன்." என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், பலரும் இவரது பதிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X