ரஜினியை மிஞ்சிய சம்பளம்.. ஒரே படத்தில் தட்டித் தூக்கிய கமல்.. அடுத்த படத்துக்கு இத்தனை கோடியா?

சென்னை: விக்ரம் படத்தின் விஸ்வரூப வெற்றியால் நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மட்டுமே 100 கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில், விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் அந்த சம்பளத்தை நெருங்கி உள்ளனர்.

ஆனால், நடிகர் கமல் 4 ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த நிலையில், அவரது சம்பளம் வெறும் 35 கோடி ரூபாய் என்கிற ரீதியில் தான் விக்ரம் படத்துக்கு முன்பு வரை இருந்தது.

வி.மு - வி.பி

வி.மு - வி.பி

கமல்ஹாசனின் வசூல் வேட்டை இனிமேல் விக்ரமுக்கு முன் விக்ரமுக்கு பின் என மாறும் என பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் மற்றும் சினிம நிபுணர்கள் அடித்துச் சொல்கின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது மானசீக குருநாதருக்கு இப்படியொரு குரு காணிக்கையை கொடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை என ஒட்டுமொத்த திரையுலகமும் கொண்டாடி வருகிறது. தமிழ் சினிமாவின் பெருமையை காப்பாற்ற வந்த படமாக விக்ரம் மாறி உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் உச்சத்துக்கு உயர்ந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமலுக்கு லாபம்

கமலுக்கு லாபம்

விக்ரம் படம் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ் சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறி உள்ளது. 400 கோடிக்கும் அதிகமாக அந்த படம் வசூல் செய்துள்ள நிலையில், படத்தின் ஓடிடி உரிமம், சாட்டிலைட் உரிமம், ஆடியோ ரைட்ஸ் என நடிகர் கமலுக்கு ஏகப்பட்ட லாபம் வந்துள்ளதாக கூறுகின்றனர். அந்த மகிழ்ச்சியில் தான் கார், பைக், ரோலக்ஸ் வாட்ச், கறி விருந்து என பரிசுகளை வாரி வழங்கினார்.

100 கோடி நாயகர்கள்

100 கோடி நாயகர்கள்

இந்திய சினிமாவிலேயே ஒரு சில நடிகர்கள் தான் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகின்றனர். அதில், அதிகப்படியானோர் கோலிவுட்டில் தான் என்பது கூடுதல் தகவல். ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட மூன்று முன்னணி நடிகர்கள் தான் கோலிவுட்டின் 100 கோடி நாயகர்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில், இந்த வரிசையில் அவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி நாயகன் மீண்டும் வந்து விட்டார் என கமல் அதிக சம்பள சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டார் என்கிற ஹாட் டாபிக் தான் தற்போது கோடம்பாக்கத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இத்தனை கோடியா

இத்தனை கோடியா

நடிகர் கமலுக்கு விக்ரம் படத்தில் சம்பளம் கொடுத்திருந்தால், அந்த படத்திற்கு வந்த ஷேர் தொகையை கணக்கீடு செய்து பார்த்தால் 130 கோடி ரூபாய் வரை சம்பளமாக கொடுத்திருக்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த படத்தில் கமல் சம்பளம் 130 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. லைகா நிறுவனம் ஏகே62 படத்திற்கு நடிகர் அஜித்துக்கு 105 கோடி ரூபாய் சம்பளம் தர உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்தியன் 2 படத்திற்கு கமலின் சம்பளம் எப்படி இருக்கும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ரஜினியை முந்திய கமல்

ரஜினியை முந்திய கமல்

எந்திரன் படத்துக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா, கபாலி, காலா, 2.0, தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட அரை டஜன் படங்கள் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில், எதுவுமே இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கவில்லை. ஆனால், விக்ரம் எனும் ஒரே படத்தில் அதை சாதித்துக் காட்டிய கமலின் சம்பளம் அவரது அடுத்த படத்தில் ரஜினிக்கு ஜெயிலர் படத்தில் கொடுக்கப் போகும் சம்பளத்தை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் தான் இதுவரை இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார் என்கிற நிலையில், நம்பர் ஒன் இடத்தை தற்போது கமல் பிடிக்கப் போகிறார் என்கின்றனர்.

ரியல் போட்டி

ரியல் போட்டி

தனக்கான சரியான ரியல் போட்டி வந்து விட்ட நிலையில், ஜெயிலர் படத்தின் பிசினஸை சரியாக செய்ய வேண்டும் என்கிற முனைப்பில் நடிகர் ரஜினிகாந்த் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே குறிக்கோளாக கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறுகின்றனர். அடுத்த கிளாஷ் ஜெயிலர் vs இந்தியன் 2வாகத் தான் இருக்கப் போகிறதா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X