Don't Miss!
- News
செவ்வாய் பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பணமழைதான்!..என்ஜாய்!!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
விக்ரம் படத்துக்கு அப்புறமா கமல் இவருக்கு ரசிகரா மாறிட்டாராம்.. யாருன்னு தெரியுமா?
மும்பை : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம்.
இந்தப் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், இன்று முதல் படத்தின் புக்கிங்குகள் துவங்கியுள்ளன.
படத்தின் பிரமோஷனுக்காக கமல் சென்னை, கேரளா, டெல்லி, மும்பை மற்றும் கோலாலம்பூர் என பறந்து பறந்து சென்று வருகிறார்.
ஆரம்பிக்கலாங்களா.. விக்ரம் படத்தின் புக்கிங் துவக்கம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்கில் உள்ளனர். இந்நிலையில் படத்தின் புக்கிங்குகள் இன்று முதல் துவங்கியுள்ளன.
|
சாண்டி பாராட்டு
முன்னதாக படத்தின் டீசர், ட்ரெயிலர், போஸ்டர்கள், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் படத்தில் முதல் பாடலுக்காக கமல் பிரத்யேகமாக நடன அசைவுகளை வெளிப்படுத்தியதாக படத்தின் டான்ஸ் மாஸ்டர் சாண்டி தெரிவித்துள்ளார். அதைப் பார்த்தவுடன் தனக்கு தன்னிச்சையாக உற்சாகம் தொற்றிக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

5 மொழிகளில் ரிலீஸ்
படத்தில் சூர்யா, ஷிவானி நாராயணன் மற்றும் அர்ஜூன் தாஸ் உள்ளிட்டவர்கள் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ளனர். இவர்களின் கதாபாத்திரம் கதையோட்டத்திற்கு சிறப்பாக உதவும் என கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

பறந்து பறந்து பிரமோஷன்
இதையடுத்து கேரளா, சென்னை, டெல்லி, மும்பை, கோலாலம்பூர் என நடிகர் கமல்ஹாசன் பறந்து பறந்து பிரமோஷன்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இந்த அளவில் சிறப்பான பிரமோஷன்கள் செய்யப்பட்ட படமாக விக்ரம் உள்ளது. தொடர்ந்து கமல் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மற்றும் டிடியுடன் பேட்டி, கேரளா பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று படத்தை பிரமோட் செய்து வருகிறார்.

கமல் ரசிகராக மாறிய தருணம்
படத்திற்காக தொடர்ந்து பல யூடியூப் சேனல்கள், டிவிக்களில் பேட்டி அளித்து வருகிறார் கமல். இந்நிலையில் இந்தப் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தன்னுடைய தீவிர ரசிகர் என்று கூறுகிறார்கள், ஆனால் இந்தப் படத்தை பார்த்த பின்பு தான் அவரது தீவிர ரசிகராக மாறிவிட்டதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விக்ரம் 3 படத்தில் சூர்யா
தொடர்ந்து விக்ரம் 3 படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதையும் ராஜ்கமல் இன்டர்நேஷனல் படத்தை தயாரிப்பதையும் உறுதிப்படுத்தியுள்ள கமல், சூர்யா படத்தில் நடிப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது தந்தையுடன் இணைந்து செயலாற்றியுள்ளதாகவும் ஆனால் தற்போது அவரது மகனை இயக்குவது சிறப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
|
உலக சினிமாவுடன் போட்டியிட வேண்டும்
தொடர்ந்து விஜய் டிவியில் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து அவர் கொடுத்துள்ள பேட்டியில் நம்முடைய சினிமா உலக சினிமாவுடன் போட்டிப் போட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இன்றைய தினம் இந்த பேட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது.