”கமல் பிறந்தநாள்” காமன் டிபி வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்.. கவசத்தில் இருக்கும் ‘அதை’ கவனிச்சீங்களா?

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் வரும் நவம்பர் 7ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

அதனை முன்னிட்டு காமன் டிபியை மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளார்.

ராஜா லுக்கில் கம்பீரமாக கமல் மிரட்டும் பிறந்தநாள் காமன் டிபி வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது.

66 வயசு

66 வயசு

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நடிப்பு பொக்கிஷம் உலகநாயகன் கமல்ஹாசனின் 66வது பிறந்தநாள் வரும் நவம்பர் 7ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சினிமா, பிக் பாஸ், அரசியல் என பன்முக பணிகளையும் சீராக சிறப்பாக கவனித்து வருகிறார் கமல். அவரது பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி வெளியாகி இருக்கிறது.

மாஸ்டர் இயக்குநர்

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள எவனென்று நினைத்தாய் படத்தின் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், "தலைவர் பிறந்தநாள்" காமன் டிபி என ட்வீட் போட்டு அட்டகாசமான பிறந்தநாள் டிபியை வெளியிட்டுள்ளார்.

ராஜா கெட்டப்பில்

ராஜா கெட்டப்பில்

அந்த காமன் டிபியில் போருக்கு செல்லும் ஒரு ராஜா கெட்டப்பில் கமல்ஹாசன் கவச உடைகளை எல்லாம் அணிந்து கொண்டு, படு ஸ்டைலாகவும் கம்பீரமாகவும் தோற்றமளிக்கிறார். #LeaderBirthdayCDP மற்றும் #HappyBirthdayLeader என்ற ஹாஷ்டேக்குகளையும் கமல் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அப்பாவுக்காக

அன்புள்ள அப்பாவின் பிறந்தநாள் வரும் நவம்பர் 7ம் தேதி வருகிறது. அதனை முன்னிட்டு, அப்பாவின் அன்புக்கு பாத்திரமான ரசிகர்களுக்காக இந்த அழகான சூப்பர் காமன் டிபியை வெளியிடுவதில் ரொம்பவே மகிழ்ச்சி அடைகிறேன் என்று கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் காமன் டிபியை வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம்

காமன் டிபியில் போர் வீரன் உடையில் இருக்கும் கமல்ஹாசனின் மார்பு பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக் கொடி சிம்பிள் பொருத்தப்பட்டிருக்கிறது. சட்ட சபை தேர்தல் பணிகள் முடக்கி விடப்பட்டிருப்பதால், பிக் பாஸ், பிறந்தநாள் என எல்லாவற்றிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் அதன் சின்னத்தையும் கமல் முன்னிறுத்தி வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில்

பிக் பாஸ் வீட்டில்

ஜித்தன் ரமேஷ் பிறந்தநாள், நிஷா பிறந்தநாள், சம்யுக்தாவின் மகன் ரயான் பிறந்தநாள் மற்றும் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் பிறந்தநாளும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாழ்த்து செய்திகளோடு கொண்டாடப்பட்டன. வரும் சனிக்கிழமை கமல் பிறந்தநாள் வருவதால், பிக் பாஸ் வீட்டில் நிச்சயம் கோலாகல கொண்டாட்டம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X