வாவ்.. எவ்ளோ பெரிய கேக்.. பிக் பாஸ் வீட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கமல் பர்த்டே பார்ட்டி!

சென்னை: உலகநாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனின் 68வது பிறந்தநாள் நவம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த முறை விஜய் டிவி கமல்ஹாசனின் பிறந்தநாளை வேறலெவலில் கொண்டாடி தீர்த்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கமல்ஹாசன் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட பிறந்தநாள் கொண்டாட்டம் என உலகநாயகனுக்கு உரித்தான மரியாதையை செலுத்தி இருக்கிறது.

விக்ரம் படத்தின் இமாலய வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா பிக் பாஸ் வீட்டில் கொண்டாடப்பட்ட புதிய ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

கமல் பிறந்தநாள்

கமல் பிறந்தநாள்

1954ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதியில் பரமக்குடியில் பிறந்த கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் பெருமையை உலக அரங்கில் பல முறை கொண்டு சென்று சேர்த்த பெருமைக்குரிய உலகநாயகனாக ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரது மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். 68வது பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.

விஜய் டிவியில் கொண்டாட்டம்

விஜய் டிவியில் கொண்டாட்டம்

கமல்ஹாசனின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் பிறந்தநாள் நிகழ்ச்சியையே விஜய் டிவி ஏற்பாடு செய்து இன்று ஒளிபரப்பியது. குஷ்பு, லோகேஷ் கனகராஜ் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமல் குறித்த சிறப்புகளை ரசிகர்களுக்காக பகிர்ந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் பிறந்தநாள்

பிக் பாஸ் வீட்டில் பிறந்தநாள்

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இன்றைய எபிசோடில் கமல்ஹாசன் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ள புதிய ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அசீம் கமலுக்கு அழகான கவிதை சொல்லி ஹேப்பி பர்த்டே சொல்கிறார். ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸ் மற்றும் ரசிகர்கள் ஹேப்பி பர்த்டே கமல் சார் என உற்சாக ஒலி எழுப்பி அரங்கையே அதிர செய்துள்ளனர்.

பெரிய கேக்

பெரிய கேக்

நல்ல பெரிய கேக் உடன் கமல்ஹாசன் ஸ்டேஜுக்கு வரும் காட்சியே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஷெரினா எவிக்‌ஷனை தாண்டி கமல் பிறந்தநாள் கொண்டாட்ட காட்சிகளை பார்க்கவே இன்றைய எபிசோடை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வெற்றி மேல் வெற்றி

வெற்றி மேல் வெற்றி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் 450 கோடி வசூல் ஈட்டி அபார சாதனை படைத்த நிலையில், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் ஆரம்பமாகி அதிரடியாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்து கமல்ஹாசன் ஹெச். வினோத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X