இது எப்போன்னு பாருங்க.. கமல்ஹாசனுக்கு ஐ லவ் யூ சொன்ன குஷ்பு.. லோகேஷ் கனகராஜும் இருக்காரே!
சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், பன்முகக் கலைஞராகவும் ஜொலித்து வருகிறார்.
60 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் இருக்கும் கமல்ஹாசன், வரும் 7ம் தேதி தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனை முன்னிட்டு கமல்ஹாசனுக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அதில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன்
தமிழ்த் திரையுலகின் மாபெரும் அடையாளம், உலக அரங்கில் இந்திய சினிமாவின் பெருமிதம் என்ற அடையாளம் நடிகர் கமல்ஹாசனுக்கு உண்டு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் முடிசூடா மன்னனாக கலக்கி வருகிறார். நடிகர், இயக்குநர், பாடகர் என சினிமாவில் கமல் செய்த சாதனைகளை அவ்வளவு எளிதாக பட்டியலிட முடியாது. தமிழ் சினிமாவில் அதிகமான புதிய முயற்சிகளை துணிச்சலாக மேற்கொண்டவர் கமல் மட்டுமே. நடிப்பில் சிவாஜிக்குப் பிறகு அசத்திய மாபெரும் கலைஞன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

கமலின் 68வது பிறந்தநாள்
சில வருடங்களாக அரசியல் பக்கம் பிஸியாக இருந்து கமல்ஹாசன், விக்ரம் திரைப்படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருந்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கமல் வரும் 7ம் தேதி தனது 68வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இப்போதே வாழ்த்து சொல்ல தொடங்கிவிட்டனர்.

விஜய் டிவியில் பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில், கமலின் 68வது பிறந்தநாளை விஜய் டிவி சூப்பராக செலிப்ரேட் செய்துள்ளது. உலகநாயகன் பிறந்தநாள் கொண்டாட்டமான இது, வரும் ஞாயிறு ( நவ 6 ) மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதில், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கேஎஸ் ரவிக்குமார், நடிகை குஷ்பூ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். கமல் பிறந்தநாள் கொண்டாட்டம், விஜய் டிவி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என தற்போது வெளியான ப்ரோமோவை பார்த்தாலே தெரிகிறது.

ஐ லவ் யூ சொன்ன குஷ்பூ
இந்த ப்ரோமோவில் கமல்ஹாசனுக்கு ஐ லவ் யூ சொல்லும் குஷ்பூ, அவருக்கு கேக் ஊட்டிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக் கூறுகிறார். க்யூட்டான எக்ஸ்பிரஷனுடன் குஷ்பூ ஐ லவ் யூ சொன்னது, ரசிகர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக்கேல் மதன காமராஜன், சிங்கார வேலன் ஆகிய படங்களில் கமல் - குஷ்பூ கெமிஸ்ட்ரி செம்மையாக ஒர்க் அவுட் ஆகிருந்தது. குஷ்பூவின் கேரியரில் இந்த இரண்டு படங்களும் ரொம்பவே முக்கியமானது. அதுமட்டும் இல்லாமல் எப்போதுமே கமலுடன் நல்ல ரேப்போவில் இருக்கும் குஷ்பூ, அவருக்கு சூப்பராக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நிகழ்ச்சியில் லோகேஷ் பங்கேற்றுள்ளதால் விக்ரம் படத்தில் இருந்து பல சுவாரஸ்யமான தகவல்களை பேசியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











