கமல் ஹாசனின் பிறந்தநாள்.. ஆண்டவரின் அசரவைக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

சென்னை: கமல் ஹாசன் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அவர் நடிக்கும் படங்கள் அனைத்திலும் ஒரு புதுமை இருக்கும். இதன் காரணமாகவே அவரை எல்லோரும் ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தற்போது தக் லைஃப் படத்தில் நடித்துவரும் கமல் ஹாசன் அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். சூழல் இப்படி இருக்க கமல் ஹாசன் இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

கமல் ஹாசன் என்ற பெயரை இந்திய சினிமாவின் வரலாற்றிலிருந்து அழிக்க முடியாது. சிறு வயதிலிருந்தே கேமரா முன் நிற்கும் அவர் சினிமாவின் அனைத்து ஜானரிலும் புகுந்து விளையாடக்கூடியவர். சினிமா மட்டுமின்றி உலக விஷயங்கள் அனைத்தையுமே விரல் நுனியில் வைத்திருப்பவர். அறிவு வளர்வதற்கு கல்வி முக்கியம்தான். இருந்தாலும் பள்ளி கல்வி முடிக்காத ஒருவர் இவ்வளவு அறிவோடு இருக்கிறாரே என்று பலரும் கமல் ஹாசனை பார்த்து ஆச்சரியம்தான் படுவார்கள்.

kamal haasan tamil cinema kollywood

அரசியல் என்ட்ரி: 233 படங்களில் நடித்திருக்கும் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் தொடங்கியிருக்கிறார். ஆனால் சினிமாவில் ஜொலித்தது போல் அரசியல் களத்தில் அவரால் ஜொலிக்க முடியவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை. அதனை புரிந்துகொண்ட அவர் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த விக்ரம் படம் மெகா ஹிட்டானது. அந்த மெகா ஹிட் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே புத்துணர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அதற்கு முன்பு வந்த தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் ஹிட்டடிக்காமல் வேற்று மொழி படங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

அடுத்தடுத்த படங்கள்: விக்ரம் பட வெற்றி கொடுத்த உற்சாகத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் அவர் நினைத்ததுபோல் வெற்றியடையவில்லை. முக்கியமாக தோல்வி அடைந்ததோடு மட்டுமில்லாமல் மிகப்பெரிய ட்ரோலுக்கும் அந்தப் படம் உள்ளானது. அந்தப் படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். இப்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பிலும் கெத்து: மேலும் அன்பறிவ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதுதவிர்த்து அவரது தயாரிப்பில் கடைசியாக அமரன் படம் வெளியானது. சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், சாய் பல்லவி ஹீரோயினாகவும் நடித்திருந்த அந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். அப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் சிம்பு நடிக்கும் 48ஆவது படத்தையும் கமல் ஹாசன் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டவரின் சொத்து மதிப்பு: சூழல் இப்படி இருக்க அவர் இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி கமலுக்கு 400 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கமலின் வீடு மட்டுமே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் இருக்கும் என்றும் அவரது அசையா சொத்து மதிப்பு ஏறத்தாழ 100 கோடி ரூபாய் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மொத்தம் அவருக்கு 500 கோடி ரூபாய் சொத்து உள்ளது எனவும்; ஒரு படத்துக்கு நூறு கோடி ரூபாய்வரை சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X