Shah Rukh Khan Birthday - பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் பிறந்தநாள்.. கமல் சொன்ன செம வாழ்த்து
சென்னை: Shah Rukh Khan Birthday (ஷாருக்கான் பிறந்தநாள்) பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு கமல் ஹாசன் தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவருக்கென்று இந்தியா முழுவதும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். உலகளவிலும் மிக பிரபலமானவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது அழகு மட்டுமின்றி நடிப்பு பலரையும் கவர்ந்திருக்கிறது. அவர் சினிமாவில் அறிமுகமானதிலிருந்து பெண்கள் அவர் மீது தீராத மையல் கொண்டிருக்கின்றனர்.

உலகம் முழுவதும் ரசிகர்கள்: ஷாருக்கானுக்கு பாலிவுட்டில் மட்டுமின்றி கோலிவுட், டோலிவுட் என அனைத்து ஏரியாக்களிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். மணிரத்னம் இயக்கிய தில் சே படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானபோது தமிழ்நாட்டில் அப்போதைய டாப் ஹீரோக்களின் படங்களுக்கே ஷாருக்கான் டஃப் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. கமல் ஹாசனுடன் ஹேராம் படத்திலும் நடித்திருந்தார்.
தொடர் 1000 கோடி ரூபாய்: ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு படங்களுமே 1000 கோடி ரூபாயை வசூலித்து மாஸ் காட்டின. இப்படி வேறு எந்த இந்திய படமும் வரிசையாக 1000 கோடி ரூபாயை வசூலிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதிலும் ஜவான் படம் 1125 கோடி ரூபாயை வசூலித்தது. அந்தப் படத்தை அட்லீ இயக்கியிருந்தார்.

மீண்டும் அட்லீயுடன்: இதற்கிடையே ஜவான் படத்துக்கு தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வட மாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் ஷாருக்கான் உற்சாகத்தின் உச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இயக்குநர் அட்லீயுடன் மீண்டும் அவர் இணையவிருப்பதாகவும் அதுமட்டுமின்றி தொடர்ந்து தென் மாநில இயக்குநர்களுடன் பணியாற்றும் நோக்கத்தில் அவர் இருப்பதாகவும் பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
பிறந்தநாள்: இந்நிலையில் ஷாருக்கான் இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் கமல் ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், "பாலிவுட்டின் பாட்ஷாவும், எனது நண்பருமான ஷாருக்கானுக்கு பிறந்ந்தநாள் வாழ்த்துகள். உங்கள் அழகு, திறமை உங்களது பிளாக்பஸ்டர் திரைப்படங்களைப் போன்றே உலகம் முழுவதும் இருக்கும் உங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன. சிறந்த நாளாக அமையட்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











