twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குனர் ராஜேஷ் மரணம்: கிசுகிசுக்கும் மல்லுவுட், தில்லாக காரணத்தை தெரிவித்த கமல் ஹாஸன்

    By Siva
    |

    சென்னை: மலையாள பட இயக்குனர் ராஜேஷ் பிள்ளை திடீர் என்று இறப்பதற்கு அவர் அளவுக்கு அதிகமாக குளிர்பானங்கள் குடித்தது தான் காரணம் என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

    பிரபல மலையாள பட இயக்குனர் ராஜேஷ் பிள்ளை கடந்த 27ம் தேதி கொச்சியில் மரணம் அடைந்தார். அவர் கல்லீரல் பிரச்சனையால் இறந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு கல்லீரல் பிரச்சனை வந்ததற்கு மது காரணம் இல்லையாம்.

    ராஜேஷ் பிள்ளை 41 வயதில் இறந்ததற்கான காரணத்தை மல்லுவுட்காரர்கள் காதும் காதும் வைத்தது போன்று பேசிக் கொள்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் கூறியிருப்பதாவது,

    குளிர்பானங்கள்

    குளிர்பானங்கள்

    ராஜேஷ் பிள்ளை அளவுக்கு அதிகமாக குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் உள்ளவர். அந்த பழக்கம் தான் அவரது மரணத்திற்கு காரணம்.

    மதங்கள்

    மதங்கள்

    எந்த உணவையும், பானங்களையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மதங்கள் அறிவுறுத்தியுள்ளன. ராஜேஷ் பர்கர், அமெரிக்க குளிர்பானங்களை அதிகமாக உட்கொண்டார். ஏதோ அவர் வாழ்க்கையே அதில் தான் ஓடியது போன்று சாப்பிட்டார்.

    கல்லீரல் பிரச்சனை

    கல்லீரல் பிரச்சனை

    ராஜேஷுக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட மது காரணம் அல்ல. மாறாக பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்த குளிர்பானங்கள் தான் அவரின் உயிரை பறித்துவிட்டன.

    ராஜேஷ்

    ராஜேஷ்

    ராஜேஷின் டிராபிக் படத்தை தமிழில் ரீமேக் செய்யும்போது அதை தயாரிக்க நினைத்தேன். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை தயாரிக்க முடியவில்லை என்றார் கமல்.

    டாக்டர்

    டாக்டர்

    குளிர்பானங்களால் மட்டுமே கல்லீரல் பாதிப்பு ஏற்படாது. ஏற்கனவே இருந்த கல்லீரல் பிரச்சனையை குளிர்பானங்கள் அதிகப்படுத்தியிருக்கும் என்று கொச்சியில் உள்ள பிவிஎஸ் மருத்துவமனையின் டாக்டர் பிரகாஷ் ஜகரியா தெரிவித்துள்ளார்.

    English summary
    Kamal Haasan has put the blame on aerated drinks for the untimely death of Malayalam director Rajesh Pillai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X