For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கமல் என் கான்ஃபிடன்ட்டையே உடைச்சிட்டாரு.. என்ன பிருத்விராஜ் இப்படி சொல்லிட்டாரே?

  |

  சென்னை: மொழி, காவியத் தலைவன் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வரும் ஜூலை 7ம் தேதி கடுவா திரைப்படம் வெளியாகிறது.

  மலையாள சினிமாவிலும் இனிமேல் பான் இந்திய படங்கள் வர வேண்டும் என ஆசைப்படுவதாக நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிருத்விராஜ் இந்த படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிட உள்ளார்.

  இந்நிலையில், நேற்று நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பிருத்விராஜ் கமல்ஹாசன் சார் என் கான்ஃபிடன்ட்டையே உடைச்சிட்டாரு எனக் கூறியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

  பிரபாஸ் படத்தில் நடிக்க அந்தவொரு கண்டிஷன் மட்டும் தான் போட்டேன்.. நடிகர் பிருத்விராஜ் ஓப்பன் டாக்! பிரபாஸ் படத்தில் நடிக்க அந்தவொரு கண்டிஷன் மட்டும் தான் போட்டேன்.. நடிகர் பிருத்விராஜ் ஓப்பன் டாக்!

  மலையாளத்தில் மாஸ் படம்

  மலையாளத்தில் மாஸ் படம்

  மலையாள திரைப்படங்கள் என்றாலே நல்ல கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் என்கிற எண்ணம் இருந்தது. அதை தற்போது மாற்றும் முயற்சியாக அங்கேயும் மாஸ் ஆக்‌ஷன் கமர்ஷியல் படங்களை இறக்கும் முயற்சியில் முதல் அடி எடுத்து வைத்துள்ளதாக சென்னையில் நேற்று நடைபெற்ற கடுவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பிருத்விராஜ் பேசியிருந்தார்.

  பிருத்விராஜின் கடுவா

  பிருத்விராஜின் கடுவா

  தமிழில் கனா கண்டேன், மொழி, நினைத்தாலே இனிக்கும், கண்ணாமூச்சி ஏனடா, ராவணன், காவியத் தலைவன், அபியும் நானும் உள்ளிட்ட சில படங்களில் நேரடியாகவே நடித்துள்ளார் பிருத்விராஜ். மலையாள திரையுலகில் மோகன்லால், மம்மூட்டிக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டிருப்பவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் வரும் ஜூலை 7ம் தேதி கடுவா எனும் மாஸ் ஆக்‌ஷன் படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது. இந்த படத்தை இயக்குநர் ஷாஜி லைலாஸ் என்பவர் இயக்கி உள்ளார். சம்யுக்தா மேனன் ஹீரோயினாகவும் விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

  சென்னையில் புரமோஷன்

  சென்னையில் புரமோஷன்

  ஹைதரபாத், சென்னை, பெங்களூரு என வெறித்தனமாக கடுவா படத்திற்கான புரமோஷனை ஆரம்பித்துள்ளார் பிருத்விராஜ். இயக்குநர் ராஜமெளலி, கமல் உள்ளிட்டோர் தங்களின் படங்களுக்காக பல மாநிலங்களுக்கு சென்று புரமோஷன் செய்ததன் விளைவு வசூலில் தெரிந்த நிலையில், இனிமேல் வெளியாகும் பல பெரிய படங்களும் இப்படித்தான் மொழி வேற்றுமைகளை கடந்து இந்திய ரசிகர்களுக்காக உருவாக்கப்படும் என்றும் கடுவா அதற்கான முதல் முயற்சி இதுபோல பல மலையாள படங்களும் வரும் வரவேண்டும் என்பது தனது விருப்பம் என பிரஸ்மீட்டில் தெரிவித்தார்.

  Recommended Video

  Herione நான்தான் Select பண்ணேன் ! | Prithviraj Speech| Kaduva Movie Press Meet *Kollywood |Fimibeat
  கமல் பேச்சைக் கேட்டு

  கமல் பேச்சைக் கேட்டு

  சென்னை ஏர்போட் இறங்கியதும் நிகழ்ச்சியில் முழுவதும் தமிழிலேயே பேச வேண்டும் என நினைத்து வந்தேன். வரும் வழியில் தெரியாத்தனமாக யூடியூபில் கமல் சார் பேசும் வீடியோவை போட்டுக் கேட்டு விட்டேன். அவர் பேசும் செந்தமிழை பார்த்த பிறகு என் கான்ஃபிடன்ஸ் முழுக்க உடைந்து விட்டது. அத்தனை வலிமை கொண்ட தமிழ் மொழியில் நானும் சில படங்களில் நடித்துள்ளேன். 'மொழி' போன்ற படத்தை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். என்னால் முடிந்த வரை தமிழில் பேசுகிறேன். பிழை இருக்கும் மன்னித்துக் கொள்ளுங்கள் என பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

  சலார் படத்தில்

  சலார் படத்தில்

  முன்னதாக கடுவா படத்திற்காக புரமோஷன் செய்த போது, நடிகர் பிரபாஸின் சலார் படத்தில் தானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், அந்த படத்தின் கதை வேறலெவலில் மிரட்டப் போவதாகவும் இயக்குநர் பிரசாந்த் நீல் கேட்டதும், டப்பிங் மட்டும் நானே பண்ணிடுறேன் என்கிற கோரிக்கையுடன் நடிக்க ஒப்புக் கொண்டேன் எனக் கூறியிருந்தார் பிருத்விராஜ். மொழி பாகுபாடின்றி சினிமாவில் பல்வேறு மொழி கலைஞர்களும் அதிகளவில் இணைந்து படங்களை கொடுத்து தங்களது மார்க்கெட்டை விரிவுப்படுத்த தொடங்கி விட்டனர்.

  English summary
  Actor Prithviraj stuns and says Kamal Haasan breaks my confident after watching his Tamil speaking video in Youtube at Kaduva movie Chennai Press meet.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X