மணிரத்னம் உட்பட சொந்தங்கள் சூழ கமல் தனது பிறந்தநாளை எங்கு கொண்டாடினார் தெரியுமா ? வெளியான போட்டோ
சென்னை : நவம்பர் ஏழாம் தேதியான இன்று, கமல்ஹாசன் தனது அறுபதெட்டாவது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார்.
களத்தூர் கண்ணம்மா படத்தில் பால் வடிந்த முகத்துடன் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலுடன் கமல் திரையில் தோன்றியபோது, தமிழ் சினிமாவில் இவர் தான் முடிசூடா மன்னனாக இருக்கப் போகிறார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இவருக்கு சினிமா மீது காதலா? ஆசையா? இல்லை வெறியா? என்னவென்று செல்வது 68 வயதிலும் அதே துள்ளுடன் ஜொலித்து வருகிறார் கமல்.

உலகநாயகன்
தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், கதாசிரியர், நடனக்கலைஞர், பாடகர், பாடலாசிரியர் என கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார் கமல்ஹாசன். நான்கு வயதில் திரைப்பயணத்தைத் தொடங்கிய கமல்ஹாசன் இதுவரை 233 படங்களில் நடித்துள்ளார்.

செவாலியர் விருது
தமிழ் சினிமாவில் அதிக தேசிய விருதுகளை வாங்கிய நடிகர் என்ற பெருமையைக் கொண்ட கமல், இந்திய அரசியின் உயரிய விருதுகளாக கருதப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை வாங்கியுள்ளார். மேலும், திரைத்துறையில் இவர் ஆற்றிய பணிகளை கௌரவிக்கும் வகையில் பிரான்ஸ் அரசு 'செவாலியர் விருது' வழங்கி கௌரவித்துள்ளது.

இன்று 68வது பிறந்த நாள்
இன்று 68வது பிறந்த நாளை கொண்டாடும் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொலைக்காட்சி, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் , பேஸ்புக் பக்கங்களிலும் கமலின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

சொந்தங்கள் இணைந்தன
இந்நிலையில், கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் வீட்டில் கமலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில், சாருஹாசன், சாருஹாசனின் மனைவி கோமளம், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி,அனு ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த புகைப்படத்தை நடிகை சுஹாசினி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சித்தப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

35 ஆண்டுகளுக்கு பிறகு
35 ஆண்டுகளுக்குப்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளயாகி உள்ளது. இந்தப்படத்தை கமலின் ராஜ்கமல் என்டர்டெயின்ட்மெண்ட், மெட்ராஸ் டாக்கீஸூடன் இணைந்து ரெட்ஜெயண்ட் மூவிஸூம் தயாரிக்கிறது. படம் 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்ற நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











