பாசத்துக்குள்ள ஒரு கூட்டணி அரசியல் இருக்கு.. அதுதான் நடக்குது.. போட்டுடைத்த கமல்.. யார் பண்றா?
சென்னை: பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே பிக் பாஸ் படத்தை பார்த்து விட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்தார் கமல்.
வழக்கம் போல அரசியலையும், பிக் பாஸ் நிகழ்ச்சியையும் மிக்ஸ் பண்ணி கமல் பேசுவதை கேட்பதே தனி சுகம் தான்.
புரிபவர்களுக்கு புரியாத படியும், புரியாதவர்களுக்கு புரியும் படியும் பேசுவது அவரது சிறப்பு.

பிக் பாஸ் சினிமா
எல்லா மசாலாவும் கலந்து கட்டி ஒரு சினிமா போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி இருப்பதை கமல்ஹாசனே சொல்லிவிட்டு, அப்புறம் அது ஸ்க்ரிப்ட் இல்லை என முட்டுக் கொடுப்பது, அவருக்கு கொடுத்த வேலையை அவர் செய்கிறார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். விமர்சனம் ஒரு போதும் தவறாகாது. மக்களே சோஷியல் மீடியாவில் சூப்பரா விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனரே

கூட்டணி அரசியல்
பிக் பாஸ் வீட்டில் ஒரு பெரிய கூட்டணி அரசியலையே அர்ச்சனா பண்ணி வருகிறார் என்பதை நாசுக்காக சொல்லி ஆரம்பத்திலேயே சிக்சர் அடித்தார் நம்மவர். இன்னும் அந்த கூட்டணி அரசியலை எப்படி எல்லாம் வெளுத்து வாங்கப் போகிறார் என்பதை பற்றியும் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்களா என்பதையும் பார்ப்போம்.

கட்சித் தாவல்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் சூப்பராக கட்சித் தாவியது நம்ம பாலாஜி முருகதாஸ் தான். எந்த கட்சி பெரிய பலத்துடன் இருக்கிறதோ, அந்த கட்சிக்கு எதிராகவே எகிறி, பின்னர் அந்த கட்சி தலைவருக்கே வாரிசாக மாறிய பாலாஜி முருகதாஸின் கட்சித் தாவல் அரசியலையும் மறைமுகமாக பேசினார்.

நல்ல மேடை
பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு நல்ல பிரச்சார மேடையாகவே கமல்ஹாசன் பயன்படுத்தி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஸ்க்ரிப்ட் பணிகளிலும் கமல் ஈடுபாடு இருப்பதாகவே தெரிகிறது என்கிற விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். பார்க்கலாம் என்ன ஆக போகிறது என்று!


Click it and Unblock the Notifications











