Bigg Boss: அட்டக்கத்தியான அசீம்.. டைட்டில் வின்னர் ஆவாரா ஷிவின்.. கண்ணாடி மூலம் போட்டோ பிடித்த கமல்!
சென்னை: இந்த வீட்டில் ரியல் கத்தி யாரு, அட்டக்கத்தி யாரு என சூப்பரான டாஸ்க் கொடுத்து மீண்டும் ஒருமுறை அசீமை அசிங்கப்படுத்தினார் கமல்ஹாசன்.
சனிக்கிழமை எபிசோடில் அசீம் சேவ் ஆகாத நிலையிலேயே அவர் தான் இந்த வாரம் வெளியேற போகிறார் என ஹவுஸ்மேட்ஸ் பலர் நினைத்துக் கொண்டு அவருக்கு அட்டக்கத்தியை உடைத்து பரிசாக அளித்து கேவலப்படுத்தினர்.
விக்ரமனுக்கு அதிக கத்திகள் போகும் என அவரது ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்க ஷிவின் அதிக கத்திகளை பெற்று கெத்துக் காட்டி உள்ளார்.

அந்த பார்வையை மாற்றிய ஷிவின்
ஷிவினை ஒரு திருநங்கை போட்டியாளர்கள் என சக ஹவுஸ்மேட்ஸோ அல்லது ரசிகர்களோ பார்க்காமல் ஷிவினாகவே பார்த்து அவரது ஆட்டத் திறமையை கண்டு ரசித்து வருகின்றனர். இவருக்கு கிடைத்த அங்கீகாரம் அனைத்து திருநங்கைகளுக்கும் சமூகத்தில் கிடைக்க வேண்டும். கல்வி அறிவு பெற்று சமூகத்தில் பல உயரிய பதவியில் பணியாற்றும் வாய்ப்பு பலருக்கும் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

சிங்கப்பெண் ஷிவின்
கடந்த சீசனில் ஒரு வாரம் கூட திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்து தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் இந்த சீசனில் 42 நாட்கள் கடந்து ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களின் மனங்களையும் கொள்ளை கொண்டு நிஜ கத்திகளை வாங்கிக் குவித்து ரியல் சிங்கப்பெண்ணாக மாறி உள்ளார் ஷிவின்.

கேமரா கண்ணாடி
என்ன திடீரென கமல்ஹாசன் கருப்பு கண்ணாடி போட்டு வந்துருக்காரே அவருக்கும் மெட்ராஸ் ஐ பரவி விட்டதா என நெட்டிசன்கள் சிலர் ட்ரோல் செய்து வந்த நிலையில், அதிக கத்திகளை வாங்கிய ஷிவினை அழகாக வீரப்பெண்மணி போல நிற்க வைத்து இந்த கண்ணாடி கேமரா கண்ணாடி படமும் பிடிக்கும் என ஸ்டில் எடுத்து அசால்ட்டு காட்டி விட்டார்.

டைட்டில் வின்னர் ஆவாரா
ஷிவினின் கேம் ஆரம்பத்தில் இருந்தே அருமையாக உள்ளது. நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அசீம் என்றாலும் சரி விக்ரமன் என்றாலும் சரி வச்சு பார்க்காமல் கேள்வி கேட்டு வருகிறார் ஷிவின் அவர் இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகின்றனர். ஷிவினுக்கு கிடைத்தால் அந்த வீட்டில் அனைவருமே நிச்சயம் சந்தோஷம் தான் படுவர். இன்னும் பாதி நாட்கள் இருக்கும் நிலையில், அவர் கேம் எப்படி போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அட்டக்கத்தி அசீம்
ஒரு பக்கம் ஷிவினுக்கு ரியல் கத்தியை ஹவுஸ்மேட்ஸ் கொடுக்க, மறு பக்கம் அசீமுக்கு கத்தியை உடைத்து கூடவே அட்வைஸ்களுடன் நீயெல்லாம் எதுக்கு இன்னும் இந்த வீட்ல இருக்கிற என்கிற மனநிலையிலேயே அட்டக்கத்தியை அசீமுக்கு கொடுத்து அசிங்கப்படுத்தி விட்டனர்.

அசீம் கலக்கம்
அமைதியா இருந்தா கேம் ஆட சொல்றீங்க, சண்டைப் போட்டு கேம் ஆடினால் அராஜகம்னு சொல்றீங்க எப்படித்தான் இந்த கேமை ஆடுவதுன்னே தெரியலையே என அசீம் புலம்பும் அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை எபிசோடு ஃபுல் ரோஸ்ட் எபிசோடாக மாறியது. திங்கட்கிழமை முதல் அசீம் நடவடிக்கையில் மாற்றம் இருக்குமா? இல்லை அசீம் அடுத்த ஐஸ்வர்யா தத்தா மற்றும் பாலாவாக மாறுவாரா? அதே ஸ்க்ரிப்ட் தானா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











