twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்வதேச திரைப்படத் திருவிழா: சித்தராமையாவுடன் கமல்ஹாசன் சந்திப்பு

    By Mayura Akilan
    |

    பெங்களூர்: பெங்களூருவில் நடைபெறும் ஆறாவது சர்வதேசத் திரைப்படத் திருவிழாவை கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவுடன் நடிகர் கமல்ஹாசன் இணைந்து துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஈரானியத் திரைப்படத் தயாரிப்பாளர் போரான் டெரக்ஷண்டே, ஜெர்மனியின் ஹோஃப் திரைப்பட விழாவின் இயக்குநர் ஹெய்ன்ஸ் ஜார்ஜ் படேவிடாஸ், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளான அம்பரீஷ், உமாஸ்ரீ, ராதிகா பண்டிட், சுதீப், ரம்யா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    Kamal Haasan and CM Siddaramaiah to inaugurate Bangalore Film Festival

    பெங்களூர் சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு 52 நாடுகளிலிருந்து 160க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வந்துள்ளன. இவை ஃபன் சினிமா, லிடோ ஐநாக்ஸ், சுலோச்சனா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய திரையரங்குகளில் நாளை முதல் 2 ஆம் தேதி வரை 230 காட்சிகள் திரையிடப்படும்.

    இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் டாக்டர். ராஜ்குமார் மற்றும் பிமல்ராயின் திரைப்படங்களும் இந்தத் திருவிழாவில் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு வாரம் நடைபெற உள்ள இந்தத் திரைப்படத் திருவிழாவில் 2,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும், 1,000க்கும் மேற்பட்ட பிரமுகர்களும் கலந்துகொள்ளுகின்றனர் என்று இவ்விழாவின் கலை இயக்குனரான எச்.என்.நரஹரி ராவ் தெரிவித்துள்ளார்.

    English summary
    Karnataka Chief Minister Siddaramaiah along with actor-director Padmashree Kamal Haasan inaugurate the sixth edition of the Bangalore International Film Festival Bangalore on December 26.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X