லடாக் எல்லை வரை சென்ற சண்டை.. இதுவும் டபுள் மீனிங்கா நம்மவரே.. இன்னைக்கு கச்சேரி இருக்குமா?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நடந்த சண்டைகளை லடாக் எல்லை சண்டை உடன் ஒப்பிட்டு ஆரம்பமே கமல் அதிரடி காட்டி உள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் சமீபத்தில் நடந்த நாடா? காடா? டாஸ்க் பத்தித் தான் கமல் பேசப் போகிறார் என்பது புரமோவிலே தெரிந்து விட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், அதனையே மையப்படுத்தி கமல் பேசியது குறிப்பிடத்தக்கது.

யாமறிந்த சீசனிலே

யாமறிந்த சீசனிலே

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்பதை யாமறிந்த சீசன்களிலேயே இந்த சீசன் போல இதுவரை கண்டதில்லை என கமல்ஹாசன் அசத்தல் என்ட்ரி கொடுத்து உள்ளே நுழைந்தார். தெனாலி பட கமல் போல அவரது நியூ லுக் இருந்ததை பார்த்த ரசிகர்கள் குஷியாகினர்.

விட்டுருந்தா அடிச்சிருப்பாங்க

விட்டுருந்தா அடிச்சிருப்பாங்க

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில், வாடா போடான்னு நடந்த அநாகரிக சண்டை, கொஞ்சம் விட்டுருந்தா அடிதடி உதை என கூட சென்றிருக்கும் என நடிகர் கமல் பேசும் போது, அய்யோ, இன்னுமா இவங்க அடிச்சிக்கல என எதிர்பார்ப்பது போலவே இருந்தது. ஆனாலும், தனக்கே உரிய ஸ்டைலில் நம்மவர் பஞ்சாயத்து பண்ணுவார்.

லடாக் எல்லை வரை சென்று

லடாக் எல்லை வரை சென்று

லடாக்கில் இந்தியா - சீனா இடையே நடைபெற்று வரும் சண்டையை குறிப்பிடும் வகையில், ஹவுஸ்மேட்ஸ் லடாக் எல்லை வரை சென்று விட்டு சண்டை போடாமல் திரும்பி விட்டனர். அதுவும் நல்லது தான் என வழக்கம் போல டபுள் மீனிங்கில் பேச ஆரம்பித்து விட்டு வெள்ளிக்கிழமை எபிசோடை பார்க்க சொல்லி விட்டார்.

கச்சேரி இருக்கு

கச்சேரி இருக்கு

இருக்கு இன்னைக்கு நிச்சயம் சனம் ஷெட்டி, சுரேஷ் சக்கரவர்த்தி சண்டை குறித்தும், பாலாஜியை குழந்தைன்னு சொல்லி அசிங்கப்பட்ட அர்ச்சனா பிரச்சனை பற்றியும் கமல் பேசுவார், நிச்சயம் ஒரு நல்ல கச்சேரி இருக்கு என பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நாற்காலி காணோம்

நாற்காலி காணோம்

போன வாரம் கமல் உட்கார்ந்து கொள்ள நாற்காலி எடுத்து வந்திருந்தார். ஆனால், இன்றைய எபிசோடில் கமலுக்கு சேர் இல்லை. என்ன ஆச்சுன்னே தெரியலையே, இன்னைக்கும் 8 மணி நேரம் கமல் சார், உட்கார முடியாமல், நின்று கொண்டே இருப்பாரா? பாவம் கால் வலிக்குமே? என நெட்டிசன்கள் பாவப்பட்டு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X