நாடு மாதிரியே பிக் பாஸ் வீட்டிலும்.. பதுக்கலும், சுரண்டலும் ஆரம்பிச்சிடுச்சு.. கமல் கவலை!

சென்னை: ஸ்வீட் செய்ய சொன்னா.. என்ன ஃபைட் போடுறாங்க என முதல் ப்ரோமோவிலேயே சனிக்கிழமை எபிசோடில் செம கச்சேரி இருக்கப் போவதை கன்ஃபார்ம் செய்துள்ளார் கமல்ஹாசன்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 6ன் 34வது நாளின் முதல் ப்ரோமிலேயே இந்த வார பஞ்சாயத்தை கையில் எடுத்துக் கொண்டு கமல் வந்து விட்டார்.

செம ஸ்லிம்மாகவும் ஸ்மார்ட்டாகவும் மாறிய கமல்ஹாசனை ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர்.

க்யூட் கமல்

க்யூட் கமல்

இந்தியன் படத்தில் வயதான சேனாபதியாக நடித்து வரும் கமல்ஹாசன் அந்த கதாபாத்திரத்திற்காக மீசையை மொத்தமாக எடுத்து விட்டு நடித்து வருகிறார். மேலும், இதற்கு முன் இருந்ததை விட அவரது உடல் எடையும் கணிசமாக குறைந்திருப்பதாக தெரிகிறது. சனிக்கிழமை எபிசோடுக்கு கமல் அணிந்து வந்த உடையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஸ்வீட்டா ஃபைட்டா

ஸ்வீட்டா ஃபைட்டா

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களை ஸ்வீட் செய்ய சொல்லி டாஸ்க் கொடுத்தால், எந்த டீம் அதிக ஸ்வீட்களை செய்வது என்கிற போட்டியில் ஏகப்பட்ட ஃபைட்டுகள் நடைபெற்றன. அந்த பஞ்சாயத்தையெல்லாம் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளில் கமல் வரிசையாக கேட்பார் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

பணத்தாசை

பணத்தாசை

பணம் சேர்க்க வேண்டும் என்கிற ஆசை வந்து விட்டாலே பதுக்கலும் சுரண்டலும் அதிகமாகவே இருக்கிறது என இந்த வாரம் நடைபெற்ற சம்பவங்களை வைத்தே சாடை மாடையாக நாட்டில் நிலவும் அரசியல் பற்றியும் கமல் டபுள் மீனிங்கில் பேசிய ப்ரோமோ பரபரப்பாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நாடு போலவே வீட்டிலும்

நாடு போலவே வீட்டிலும்

நாட்டில் பதுக்கலும் சுரண்டலும் இருப்பதை போலவே பிக் பாஸ் வீட்டிலும் நடந்து உள்ளது. இதுதான் அவர்கள் நிஜ முகமா? அல்லது போலி முகத்திரையை போட்டுக் கொண்டு இருக்கிறார்களா? என்பதை கேட்போம் என கமல்ஹாசன் பேசியுள்ள காட்சிகள் இன்றைய முதல் ப்ரோமோவில் வெளியாகி உள்ளன.

ப்ரோமோ பரவாயில்லை

ப்ரோமோ பரவாயில்லை

வழக்கமாக சனிக்கிழமை கமல்ஹாசன் வரும் முதல் ப்ரோமோ எதுக்குமே வேலைக்காகாத ப்ரோமோவா இருக்கும் என ரசிகர்கள் அதனை ஸ்கிப் செய்து விடும் நிலையில், இன்றைய முதல் ப்ரோமோவில் கன்டென்ட் சம்பந்தமாகவும் அரசியல் ரீதியாகவும் கமல் பேசியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 2வது ப்ரோமோவில் யாருக்கு கச்சேரி இருக்கு என்பதை காண ரசிகர்கள் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X