twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்!

    5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு நடிகர் கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்..புதிய கல்வித் திட்டத்திற்கு கமல் கண்டனம்

    சென்னை: 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல் ஹாசன்.

    புதியக் கல்வி கொள்கையின் படி தமிழகத்தில் 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என அரசு முதலில் அறிவித்தது. பின்னர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த முடிவு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    தும்பியின் வாலில் பாறாங்கல்

    தும்பியின் வாலில் பாறாங்கல்

    இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் இதுகுறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஒரு தும்பியின் வாலில் பெரிய பாறாங்கல்லை கட்டி வைப்பது எவ்வளவு பெரிய சுமையோ, அதைவிட பன்மடங்கு அதிகமானது ஒரு 10 பத்து வயது மாணவனின் தலையில் பொதுத் தேர்வு எனும் பாரத்தை தூக்கி வைப்பது என தெரிவித்துள்ளார்.

    புதிய கல்வி திட்டம்

    புதிய கல்வி திட்டம்

    மேலும் " இந்த கல்வி திட்டம் நம் குழந்தைகளுக்கு எதை சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ, மன அழுத்தத்தை நிச்சயம் சொல்லிக்கொடுக்கும். இந்த திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது. குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் தேர்வு பயம் தான் அதிகமாகும்.

    அதிக பாதிப்பு

    அதிக பாதிப்பு

    சாதிகளாலும், மதத்தினாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைவிட மதிப்பெண்களால் ஏற்படப் போகும் ஏற்றத் தாழ்வுகளால் தான் இப்போது பாதிப்பு அதிகமாக இருக்கப்போகிறது. இந்த பாதிப்பு சமூகத்தில் எதிரொலிக்கும் போது, ஒரு குழந்தை இந்த சமூகத்தில் வாழ நமக்கு தகுதியே இல்லையோ என கூனிக்குறுகிப் போகும்.

    வன்மையாக கண்டிக்கிறேன்

    வன்மையாக கண்டிக்கிறேன்

    நான் எட்டாவதோடு என் படிப்பை நிறுத்தியதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இனி எந்த குழந்தை படிப்பை நிறுத்தினாலும் அதற்கு நீங்கள் இப்போது அமல்படுத்தி இருக்கும் பொதுத் தேர்வு திட்டம் தான் முக்கிய காரணமாக இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எள் அளவும் பயன்தாராத இந்த புதிய கல்வி திட்டத்தை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிப்பதுடன், இந்த திட்டத்தை உடனடியாக திரும்பிப்பெற வலியுறுத்துகிறது.

    மாற்றம் எளிதாகும்

    இந்த புதிய திட்டத்திற்கு பதிலாக பள்ளி கட்டடங்களை மேம்படுத்துவதிலும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் மாற்றம் எளிதாகும். நாளை நமதாகும்", என அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    The Makkal Neethi maiyam president actor Kamal condemned the new education policy to amend public exams for the classes 5 and 8.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X