அன்புத் தம்பி புனித் ராஜ்குமார் மரணம்… பேரதிர்ச்சியில் உறைந்தேன்… கமல் இரங்கல் !

சென்னை : கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமான நேற்று காலை உயிரிழந்தார்.

புனித்தின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் இன்று நடைபெற்றது. இதில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைபிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய,கமல் ஹாசன், அன்புத் தம்பி புனித் ராஜ்குமாரின் மரணச்செய்தி என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றார்.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

15 போட்டியாளர்கள்

15 போட்டியாளர்கள்

இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து, நாடியா மற்றும் அபிஷேக் வெளியேறினார். தற்போது பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் போட்டியாளர்களுடன் கலந்து பேசி பிக் பாஸ் இல்லத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்தும், அதற்கான தீர்வுகளையும் குறித்தும் பேசிவருகிறார்.

புனித் மரணம் பேர் அதிர்ச்சி

புனித் மரணம் பேர் அதிர்ச்சி

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசன், புனித் ராஜ்குமார் மரணம் குறித்து பேசினார். என் தம்பி புனித்தின் மரணம் என்னை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்னை குடும்பத்தில் ஒருவராக நினைத்தவர் தான் ராஜ்குமார். அவருக்கும் அவரது குடும்பத்திறகும் ஆறுதல் கூறிக்கொள்கிறேன் என்றார்

கண் தானம்

கண் தானம்

அவர் புகழை மட்டும் விட்டுச்செல்லவில்லை அவர் வாழ்ந்ததற்கான செய்தியையும் விட்டு சென்றுள்ளார். தன்னுடைய கண்களை தானமாக விட்டுச் சென்றுள்ளார். இந்த வயதில் இந்த முடிவை எடுத்ததை நான் வியந்து பாராட்டுகிறேன் என்றார். தன்னுடையே மக்கள் பற்றியும் சூழல் பற்றியும் அவர் பலமுறை யோசித்து இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கமல் ஹாசன் பே பேசினார்.

அரசு மரியாதையுடன்

அரசு மரியாதையுடன்

கான்டீர்வா ஸ்டுடியோவில் புனித்தின் இறுதி சடங்குகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவரது உடல் கான்டீர்வா மைதானத்திலிருந்து ஸ்டுடியோவுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து புனித்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X