முத்துக்குமாரின் தன் நலம்பேணாத் தற்கொலையால் கோபமே: கமல் ஹாஸன்
சென்னை: இன்று மாரடைப்பால் மரணம் அடைந்த கவிஞர் நா. முத்துக்குமார் மீது கோபமே என கமல் ஹாஸன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இரண்டு முறை தேசிய விருது வாங்கிய பாடலாசிரியரும், கவிஞருமான நா. முத்துக்குமார் இன்று மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார். 41 வயதில் முத்துக்குமார் மரணம் அடைந்துள்ளது திரையுலகினரை பேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மரணம் அடையும் வயதா இது, அதற்குள் உங்களுக்கு என்ன அவசரம் என்று இயக்குனர் பாண்டிராஜ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து கமல் ஹாஸன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை ந.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நலம்பேணாத் தற்கொலையால் கோபமே. எனினுமவர் கவிக்கும் நட்பிற்கு நன்றி.
உங்களை மிஸ் பண்ணுகிறேன் என் நண்பரே. நீங்கள் விட்டுச் சென்ற வார்த்தைகளுக்காக நன்றி. நாங்கள் உங்கள் கவிதைகளை ரசிப்பதில் பாதி அளவாவது நீங்கள் வாழ்க்கையை ரசித்தீர்கள் என்று நம்புகிறேன்.


Click it and Unblock the Notifications











