42 வருட நட்பு, முரட்டு உருவம், மழலை உள்ளம்: அம்பரீஷ் மறைவுக்கு கமல் இரங்கல்

By Siva

Recommended Video

நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு கமல் ஹாஸன் இரங்கல்

சென்னை: நடிகர் அம்பரீஷின் மறைவுக்கு கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார். பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பரீஷின் உடலுக்கு பொதுமக்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கமல் ஹாஸன்

42 வருடங்களாக என் நண்பர் திரு.அம்பரீஷ். முரட்டு உருவம், மழலை உள்ளம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும், என்னைப் போன்ற நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று ட்வீட் செய்துள்ளார் உலக நாயகன் கமல் ஹாஸன்.

குஷ்பு

அப்படியே அதிர்ச்சி அடைந்துவிட்டேன். இது உண்மை இல்லை என்று மனம் கூறுகிறது. நண்பர் அம்பரீஷ்ஜியின் திடீர் மரணம் எங்களின் இதயங்களை நொறுக்கிவிட்டது என்று ட்வீட்டியுள்ளார் குஷ்பு.

இரங்கல்

என்ன ஒரு அருமையான மனிதர். உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவேன். சுமா மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் ராதிகா சரத்குமார். அம்பரீஷின் மரணம் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும் என்கிறார் அவர்.

அதிர்ச்சி

அம்பரீஷ் இல்லாமல் கன்னட திரையுலகமும், கர்நாடகாவும் ஏழையாகிவிட்டது என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டாக்டர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X