சுருதியின் வெளியேற்றத்தை உறுதி செய்த பிக் பாஸ் புரமோ 3.. ஆனா யாரு எடுத்த தீர்மானம்னு தான் தெரியல?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட சுருதி கடைசி வரை இந்த சீசனில் நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
அதனை உறுதி செய்யும் விதமாகவே தற்போது வெளியாகி உள்ள 3வது புரமோ உள்ளது.
சுருதி காப்பாற்றப்படுவார் என ராஜுவும் பிரியங்காவும் போராட கமல் வேறுவிதமாக பதில் சொல்லியதிலேயே சுருதி தான் இந்த வாரம் வெளியேறி உள்ளார் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

போரிங்கான சீசன்
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பிக் பாஸ் தமிழ் 5 சீசன் ரொம்பவே போரிங்கான ஒரு சீசனாக உள்ளதாக தொடர்ந்து பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். போட்டியாளர்கள் தேர்வே சரியில்லை என்றும் போன சீசனே சூப்பர் என இந்த சீசன் சொல்ல வைத்து விட்டது என்றும் அடுத்த சீசன் வந்தால் 5வது சீசனும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்குத் தான் இருக்கப் போகிறது என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

சேஃப் கேம் விளையாடுனா போதும்
பிக் பாஸ் வீட்டில் பல வாரங்கள் தங்கி இருக்க சேஃப் கேம் விளையாடுனா போதும் என்றும் துணிச்சலாக இறங்கி விளையாடுபவர்களுக்கும் கன்டென்ட் கொடுப்பவர்களுக்கும் இங்கே இடமில்லை என்றும் டோட்டலாவே இது ஒரு ஸ்க்ரிப்டட் ஷோ தான் அதனை மறைக்க பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்தே சில பல வசனங்களையும் சொல்ல வைத்து இந்த சீசனை ஓட்டி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பி உள்ளன.

சுவாரஸ்யம் இல்லை
சனிக்கிழமை மாலையே பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறி உள்ளார் என்கிற தகவல் சமூக வலைதளங்களில் கசிந்து விடும் நிலையில் இன்றைய முதல் இரு புரமோக்களை போல மூன்றாவது புரமோவிலும் எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லை.

எவிக்ஷன் பற்றி
சுருதி வெளியேறியதை அறிந்த பிறகு ராஜு மற்றும் பிரியங்கா சுருதி காப்பாற்றப்படுவார் என 3வது புரமோவில் கணித்து சொல்ல அவங்க எடுத்த தீர்மானம் வேற மாறி இருக்கே என கமல் சுருதி தான் வெளியேறுகிறார் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த புரமோ அமைந்துள்ளது.

அடுத்து பாவனியா?
அபிநய், ஐக்கி பெர்ரி, தாமரை செல்வி, இமான் அண்ணாச்சி, இசைவாணி உள்ளிட்டவர்களுக்கு பிறகு தான் சுருதி வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தாமரை காயினை திருடியதற்காக சுருதி இந்த வாரம் வெளியேற்றப்படுகிறார் என்றே வைத்துக் கொண்டால் அடுத்த வாரம் அவருக்கு துணை நின்ற பாவனியை தான் வெளியேற்றப் போகிறார்களா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த வாரமும் தாமரையுடன் பாவனி சண்டை போட்டது குறிப்பிடத்தக்கது.

உஷாரா காயினை யூஸ் பண்ணுங்க
நிச்சயம் அடுத்த வாரம் கேப்டன் பதவியை மாற்றி அமைக்க பாவனி ரெட்டி தனது காயினை யூஸ் செய்து விளையாட வேண்டும் என்பதே ஏகப்பட்ட ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மேலும், இனிமேல் அந்த காயினை திருடவும் அதனை பயன்படுத்தவும் மற்ற போட்டியாளர்கள் மும்முரம் காட்டுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











