அசுரனில் மஞ்சு வாரியர் ஒவ்வொரு சீனிலும் அபாரம் - கமல் பாராட்டு
Recommended Video
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மற்றம் மஞ்சு வாரியர் நடித்த அசுரன் படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், படத்தை வெகுவாக பாராட்டியதோடு, மஞ்சு வாரியரை தனிப்பட்ட முறையில் நேரில் அழைத்து, அவரின் சிறப்பான நடிப்பிற்காக அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அந்த தருணத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் மற்றும் மஞ்சு வாரியார் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வைரலாகி வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டான திரைப்படம் அசுரன். நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மலையான முன்னணி கதாநாயகி மஞ்சு வாரியார். இப்படம் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

அசுரன் படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள், தங்களது வாழ்த்தினை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த பட்டியலில் இப்போது இணைந்துள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன். கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் இருவரும் இப்படத்தினை ஸ்பெஷல் ஷோ மூலம் பார்த்தனர்.
கமல்ஹாசன், இப்படத்தில் தனுஷ் தனது யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். மேலும் மஞ்சு வாரியாரின் நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் அபாரம். இவர்களை இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பாக இயக்கியுள்ளார் என்று பாராட்டினார்.
மேலும் மஞ்சு வாரியரை தனிப்பட்ட முறையில் நேரில் அழைத்து, அவரின் சிறப்பான நடிப்பிற்காக அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அந்த தருணத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் மற்றும் மஞ்சு வாரியார் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வைரலாகி வருகிறது.
மேலும், தனுஷையும் பாரட்டுவதற்காக கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா லட்சுமியுடன் இணைந்து நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். அதனால் அவரால் உலகநாயகனை நேரில் சந்தித்து ஆசி பெறமுடியாமல் போனது. தனுஷ் திரையுலக வாழ்வில் அசுரன் நிச்சயம் ஒரு மைல் கல்லாக அமையும்.
ரசிகர்கள் பலரும் மஞ்சு வாரியார் இத்தனை திறமையான நடிகையாக இருந்தும் ஏன் தமிழ் சினிமாவில் நுழைய இத்தனை காலம் ஆனது என்ற கேள்விக்கு, அவர் சமீபத்தில் நடந்த நேர்காணலின் போது பதிலளித்தார். என்னுடைய கால்ஷீட் பிரச்சனையால் என்னால் இதுவரை பல தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தும் நடிக்கமுடியாமல் போனது.
ஆனால், தமிழ் சினிமாவில் எனக்கு கிடைத்த இந்த நல்ல அறிமுகத்திற்கு நான் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தனுஷிற்கு தான் நன்றி கூறவேண்டும், என்று கூறினார். அவர் இனிமேல் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி கதாநாயகியாக ஒரு ரவுண்டு வருவார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.


Click it and Unblock the Notifications











