“உங்களால் தமிழகம் பெருமை கொள்கிறது“… பத்மஸ்ரீ விருதுபெறுவோருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

சென்னை : நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இதில் பத்மவிபூஷன் 4 பேருக்கும், பத்மபூஷன் 17 பேருக்கும், பத்மஸ்ரீ 107 பேருக்கும், விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உயரிய விருது

உயரிய விருது

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் கருதப்படுகிறது. மிக அரிய சேவையாற்றியவர்களுக்கு பத்ம விபூஷன் விருதும், மிக உயரிய வகையில் தலைச்சிறந்த சேவையாற்றியவர்களுக்கு பத்ம பூஷன் விருதும், எந்தத் துறையிலும் தலைசிறந்த பணியாற்றியவர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது ஒவ்வொரு ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும்.

7 தமிழர்களுக்கு விருது

7 தமிழர்களுக்கு விருது

அந்தவகையில் நேற்று பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் வாழ்த்து

கமல்ஹாசன் வாழ்த்து

அதில்,பத்மபூஷண் விருது பெறும் தமிழரான டாடா குழுமத்தின் சேர்மன் நடராஜன் சந்திரசேகரன், தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் வாழும் கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

தமிழகம் பெருமை கொள்கிறது

தமிழகம் பெருமை கொள்கிறது

அதேபோல பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் தமிழர்களான கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், ஷெனாய் இசைக்கலைஞர் பண்டிட் எஸ். பாலேஷ், சமூக சேவகர் எஸ். தாமோதரன், பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, சதிர் நடனக்கலைஞர் விராலிமலை ரா. முத்துக்கண்ணம்மாள் கிளாரினெட் இசைக்கலைஞர் ஏ.கே.சி. நடராஜன், மருத்துவர் வீராசாமி சேஷய்யா, புதுச்சேரி தவில் இசைக்கலைஞர் ஏ.வி.முருகைய்யன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களால் தமிழகம் பெருமை கொள்கிறது என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

சௌகார் ஜானகி

சௌகார் ஜானகி

சினிமாத்துறையில் 70ஆண்டுகளுக்கும் கிட்டத்தட்ட 450 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 3000 க்கும் அதிகமான நாடகங்களில் நடித்தவர் சௌகார் ஜானகி. தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலமாக பல்வேறு பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர் சௌகார் ஜானகி. அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவது பெருமையாக கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X