கமல்ஹாசனின் அட்டகாசமான காஸ்டியூம்… உலகநாயகனின் ஸ்டைலை கூட்டும் இளம் பெண்!

சென்னை : நடிகர் நடிகர்களுக்கு நடிப்பு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு மிகவும் முக்கியமானது காஸ்டியூம்.

ஒரு பாடலுக்கோ, ஒரு காட்சிக்கோ சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உடை இருக்கும் போது அது ஒட்டுமொத்தமாக படத்தையே சொதப்பிவிடும்.

நடிப்பு என்றாலு சரி, இயக்கம் என்றாலும் சரி, காஸ்டியூம் என்றாலும் சரி அதற்காக மெனக்கெடுபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இளம் வயதில் டிரஸ்சுக்காகவே பெயர் பெற்றவர். அன்று முதல் இன்று வரை உடைக்கு தனி கவனம் கொடுத்து சிறப்பாக செய்து வருகிறார் கமல்ஹாசன் .

உலக நாயகன்

உலக நாயகன்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், நடன இயக்குநர், பாடலாசிரியர், அரசியல்வாதி என பன்முகங்களை வெளிப்படுத்தும் ஓர் மகத்தான நடிகர் கமல்ஹாசன். கருப்பு வெள்ளை சினிமா காலம் தொடங்கி டிஜிட்டல் சினிமா காலம் வரை திரை உலகில் கமலஹாசன் நிலைத்திருக்கும் சாதனைகள் ஏராளம்.

பிக் பாஸில்

பிக் பாஸில்

வெள்ளித்திரையில் மட்டும் ஜொலித்துக் கொண்டிருந்த கமல், பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் மனதில் மேலும் நெருக்கமாகி விட்டார். விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 5 தொகுத்து வழங்கி, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார். திடீரென பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தற்போது அந்த நிகழ்ச்சி சிம்பு தொகுத்து வழங்க உள்ளார்.

சூப்பரான காஸ்டியூம்

சூப்பரான காஸ்டியூம்

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களுக்கு தரிசனம் தருவார். ஒவ்வொரு வாரமும் அவரின் உடை தனிசிறப்பானதாகவே இருக்கும். அந்த நிகழ்ச்சியில் விதவிதமான காஸ்டியூம் அணிந்து வந்ததற்கு காரணம் கமலின் காஸ்டியூம் டிசைனரான அமிர்தா ஸ்ரீ ராம் என்ற காஸ்டியூம் டிசைனர் தானாம். கமலின் அட்டகாசமான உடைக்கு பின்னால் இருக்கும் இளம் பெண்ணை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

காஸ்டியூம் டிசைனராக

காஸ்டியூம் டிசைனராக

அதேபோல, கமலின் முதல் மனைவியான வாணி கணபதி, கமலின் 80ஸ் 90ஸ் படங்களில் காஸ்டியூம் டிசைனராக இருந்தார். அவர் கமலுக்காக வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று காஸ்ட்யூம் வாங்கிவருவார். அவருடைய உடையை பார்க்கவே ரசிகர்கள், ரசிகைகள் அலைபாய்வார்கள். விவாகரத்துக்குப்பின் தனி காஸ்டியூமர் இல்லை. நீண்ட நாட்களுக்கு பின் தற்போது தான் கமலுக்கு இளம் காஸ்டியூம் டிசைனர் கிடைத்து இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X