பிக் பாஸால் எச்சரிக்கப்பட்ட முதல் கேப்டன் நீங்கதான்… கமலிடம் வாங்கிகட்டிக்கொண்ட இசைவாணி !

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக 43 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டு இருகிறது.

ஞாயிற்றுக்கிழமையான இன்று, கடந்த வார பிக்பாஸ் வீட்டில் சண்டை குறித்து கமல் போட்டியாளர்களிடம் கேட்டார். மேலும், தோள் கொடுத்தவர் யார், முதுகில் குத்தியவர் யார் என்பது குறித்தும் விரிவாக கேட்டார்.

மேலும், பிக்பாஸால் வார்னிங் கொடுக்கப்பட்ட முதல் கேப்டன் நீங்க தான் என்று இசைவாணியிடம் நேரடியாக கூறினார்.

சண்டை பற்றி பேசினார்

சண்டை பற்றி பேசினார்

பிக் பாஸ் 5ல் கடந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவு நிலவியது. அதிலும் குறிப்பாக பொம்மை டாஸ்கில் நிரூப் வருண் இடையே நடந்த சண்டை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். அக்ஷரா பீப் போடும் அளவுக்கு தகாத வார்த்தைகள் பயன்படுத்தி பேசியது என பல விஷயங்கள் குறித்து கமல் ஹாசன் போட்டியாளர்களிடம் பேசினார்.

கேப்டன் இசைவாணி

கேப்டன் இசைவாணி

இதில் நெருப்பு நாணயத்தை பயன்படுத்தி அபினய்யின் கேப்டன் பதவியை தட்டிப் பறித்து கேப்டன் ஆகி உள்ள இசைவாணியிடம், ஒவ்வொரு போட்டியாளரும் கஷ்டப்பட்டு விளையாடினார்கள். அபினய் இறுதிவரை இருந்து தலைவர் பதவியை வென்றார். ஆனால், அவர் கஷ்டப்பட்டு வாங்கி கேப்டன் பதவியை நாணயத்தை பயன்படுத்தி வென்றார். அவர் அந்த பதவியை சரியாக பயன்படுத்தினாரா என்று ஹவுஸ்மெட்டுகளிடம் கேட்டார்.

கஷ்டமா இருந்தது

கஷ்டமா இருந்தது

இதையடுத்து பேசிய தாமரை, இசைவாணி அன்பா நடந்துக்கொள்ளவில்லை என்றார். அவங்க கிட்டத்தான் சாப்பாடு, தண்ணீர் எல்லாம் கேட்கணும் ஆனால், அவங்க சாப்பாடு கொடுக்கும் போது முகத்தை கடுப்பாக வைத்துக்கொண்டு கொடுத்தார் அது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது என்று கமலிடம் நேரடியாக கூறினார்.

வார்னிங் கொடுத்த பிக்பாஸ்

வார்னிங் கொடுத்த பிக்பாஸ்

இதையடுத்து பேசிய கமல்ஹாசன், பிக்பாஸால் வார்னிங் கொடுக்கப்பட்ட முதல் கேப்டன் நீங்க தான் என்று இசைவாணியிடம் முகத்திற்கு நேராகவே கூறினார். இதனால், இசைவாணியின் முகம் சோர்ந்தது. இதையடுத்து, தாமரையிடன் பேசிய இசைவாணி, சாப்பாடு கொடுக்கும் போது யாரும் அப்படி முகத்தை வெச்சிக்கிட்டு தரமாட்டாங்கக்கா ஏன் அப்படி சொல்றீங்க என்று பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X