Akshara Hassan: ஓவர் ஸ்டைல்.. நம்ம ஆண்டவரின் மகள் அக்ஷரா ஹாசனின் கலக்கல் புகைப்படம்!

சென்னை: நடிகர் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அஜித், சிறுத்தை சிவா தொடர் கூட்டணியில் உருவான விவேகம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரியானார் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன்.

Kamal haasan daughter akshara hassan latest instagram post

இப்பொழுது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை அக்ஷரா ஹாசன்: சிறுத்தை வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கிய அனைத்து திரைப்படங்களும் அஜித்துடன் கூட்டணி அமைத்து வெளிவர அதில் விவேகம் திரைப்படத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இந்தியில் சில திரைப்படங்களில் நடித்து வந்த அக்ஷரா இப்பொழுது தமிழில் முழு கவனத்துடன் படங்களில் நடித்து வருகிறார்.

கடாரம் கொண்டான்: முதல் படத்திலேயே அஜித்துடன் ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பிய அக்ஷரா ஹாசன் அடுத்து விக்ரம் நடிப்பில் அப்பா கமல் ஹாசனின் தயாரிப்பில் வெளியான கடாரம் கொண்டான் மற்றும் ப்ங்கர்டிப் வெப் சீரிஸ் உள்ளிட்டவைகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார்.

அக்னி சிறகுகள்: விஜய் ஆண்டனி, அருண் விஜய் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் அக்னி சிறகுகள் படத்தில் விஜி என்ற ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் நவீன் இயக்கி வர தாறுமாறான ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் விஜய் ஆண்டனியின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என வெளியாகும் என படக்குழு கூறிவந்த நிலையில் சில காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அக்ஷரா ஹாசனா இது: இதுவரை நடித்த திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடிப்பு மற்றும் ஆக்ஷனில் தூள் கிளப்பி வந்த அக்ஷரா இப்பொழுது செம ஸ்டைலாக அட்டகாசமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பேன்ஸ் நம்ம ஆண்டவரின் மகள் அக்ஷரா ஹாசனா இது என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X