அக்‌ஷராவுக்கு லைக் போட்ட பஞ்சாயத்தை ஆரம்பித்த கமல்.. பிரியங்காவுக்கு டோஸ் இருக்கும் போல?

சென்னை: அக்‌ஷராவுக்கு ராஜு ஜெயமோகன் போட்ட லைக் குறித்தும் அதற்கு பிரியங்கா தெரிவித்த எதிர்ப்பு பஞ்சாயத்தையும் கையில் எடுத்துள்ள கமலின் கலக்கல் புரமோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலே சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளில் கமல்ஹாசன் வந்து பஞ்சாயத்து பண்ணும் படலம் தான் ரசிகர்களின் ஃபேவரைட்டான ஒன்று.

கடந்த ஆண்டை போல இல்லாமல் இந்த ஆண்டாவது கொஞ்சம் கமல் சாட்டையை சுழற்றுவாரா என ரசிகர்கள் அதிகமாகவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

லைக் போட்டது ஒரு குத்தமா

லைக் போட்டது ஒரு குத்தமா

யாரு யாருக்கு வேண்டுமானால் லைக், டிஸ்லைக், ஹார்ட்டீன் கொடுக்கலாம் எனும் போது பலரும் பலருக்கு கொடுத்து வந்த நிலையில், அக்‌ஷராவுக்கு ராஜு ஜெயமோகன் போட்ட லைக் வார இறுதியில் கமல் சாரிடமே பஞ்சாயத்துக்கு வரும் அளவுக்கு பெரிய விஷயமாக இந்த வாரம் அமைந்து விட்டது.

இவர் தான் காரணம்

இவர் தான் காரணம்

இந்தளவுக்கு அந்த விஷயம் பெரிதாக கன்டென்ட் கொடுத்ததே நம்ம விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தான். ஷோ கொஞ்சம் போரிங்கா போனாலும், பிரியங்கா ஏதாவது சலசலப்பை கிளப்பி இன்ட்ரஸ்டிங்காக மாற்றவும் சண்டைகளை உருவாக்கும் சீக்ரெட் போட்டியாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா இல்லை அவருக்கே எதையெல்லாம் கன்டென்ட்டாக மாற்ற முடியும் என நன்கு தெரியும் என்பதால் இப்படி செய்கிறாரா? என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அக்‌ஷராவை பிடிக்கும்

அக்‌ஷராவை பிடிக்கும்

அக்‌ஷராவுக்கு ஏன் லைக் போட்டீங்கனு கமல் ராஜு ஜெயமோகனிடம் கேட்டதும் அக்‌ஷராவின் ஸ்டோரியை விட அக்‌ஷராவை ரொம்பவே பிடிக்கும் சார் அதுக்காகத்தான் லைக் போட்டேன் என்று சொல்லி வசமாக மற்ற போட்டியாளர்களிடம் கமல் விரித்த வலையில் மாட்டிக் கொண்டார். அப்போ எங்களை எல்லாம் உனக்கு பிடிக்காது என பிரியங்கா ராஜு ஜெயமோகனை முகத்துக்கு நேராக கேட்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

காசு வாங்கும் விமர்சகர்

காசு வாங்கும் விமர்சகர்

பிரியங்கா நீங்க ராஜு ஜெயமோகனை அந்தளவுக்கு மிரட்டுறீங்களா என்கிற தொனியில் கேட்ட கமல் மீண்டும் மீண்டும் நோண்டிக் கேட்க, காசு வாங்கிக் கொண்டு பிடித்தவருக்கு சாதகமாக விமர்சனம் செய்யும் விமர்சகர் போல ஆகிவிட்டேனோ என நினைக்கிறேன் சார் என ராஜு ஜெயமோகன் சரண்டர் ஆகி விட்டார்.

பாவம் அபிஷேக்

பாவம் அபிஷேக்

இதுதான் சாக்கு என நினைத்த பிக் பாஸ் எடிட்டர் அபிஷேக் ராஜாவின் ரியாக்‌ஷனை எடுத்து போட்டு சினிமா விமர்சகர் அபிஷேக் ராஜாவை எந்தளவுக்கு வச்சு செய்ய முடியுமோ அந்தளவுக்கு வச்சு செய்து விட்டார் என ரசிகர்கள் கமெண்ட்டில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X