»   »  மீண்டும் அரைகுறை ட்வீட்: ட்வீபிள்ஸ்களிடம் வசமாய் சிக்கிய கமல் ஹாஸன்

மீண்டும் அரைகுறை ட்வீட்: ட்வீபிள்ஸ்களிடம் வசமாய் சிக்கிய கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவை அடுத்து சோவின் மறைவுக்கும் பெயரை குறிப்பிடாமல் மொட்டையாக ட்வீட் போட்டுள்ளார் உலக நாயகன் கமல் ஹாஸன்.

உலக நாயகன் கமல் ஹாஸன் ஜெயலலிதாவின் மரண செய்தி அறிந்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று மொட்டையாக ட்வீட்டினார் கமல்.

விஸ்வரூபம் பிரச்சனையை மனதில் வைத்தே கமல் இப்படி ட்வீட் போட்டுள்ளார் என்று சமூக வலைதளங்களில் பலர் தெரிவித்தனர். இந்நிலையில் பத்திரிகையாளர் சோ ராமசாமியின் மரணத்திற்கும் அதே போன்று பெயரைக் குறிப்பிடாமல் மொட்டையாக ட்வீட் போட்டுள்ளார். இதை பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இந்த வாட்டியும்

இந்த வாட்டியும் பேர சொல்லாம இயல்பாவே மேட்ச் பன்றிங்களாக்கும்... சும்மாவா சொன்னாய்ங்க உலகநாயகன்னு..நல்லா பன்ற மேன் பெர்பாமன்ஸ்

ஏன்?

நீங்கள் ஏன் அவர்களின் பெயரை குறிப்பிடக் கூடாது சார்? அவர்கள் எல்லாம் உங்களுக்கு முந்தைய சகாப்தத்தை சேர்ந்தவர்கள். அதனால் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

ஐகன்

ஃபோர்டு ஐகனை சொல்றீங்களா?

பெயர்

@ikamalhaasan யாருக்கு இரங்கல் என்று குறிப்பிடாமல் தெரிவிப்பது என்று ஏதாவது சபதமா? இல்லை அதையும் விவாதம் செய்யட்டும் என்று விட்டுவிட்டீர்களா?

English summary
Kamal Haasan has stirred a controversy again by tweeting without Cho's name while conveying his condolences.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil