Goundamani - கவுண்டமணியை கமலுக்கு பிடிக்கவே பிடிக்காதா?.. இதுதான் காரணமா?
சென்னை: Goundamani (கவுண்டமணி) கவுண்டமணியை கமல் ஹாசனுக்கு பிடிக்காததான் காரணம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் கவுண்டமணி. முற்போக்கு கருத்துக்களையும், டைமிங் கவுண்ட்டர்களையும் கவுண்டமணி தனது நகைச்சுவை மூலம் பிரதிபலித்தவர். எந்த காமெடி நடிகர் வந்தாலும் அவரது சாயல் இல்லாமல் ஒரு காமெடியும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு அவரது தாக்கம் பலரிடத்தில் இருக்கும். உதாரணமாக சந்தானத்தையே கவுண்டமணியின் அப்டேடட் வெர்ஷன் என்றுதான் ஒருதரப்பினர் கூறினர்.

விமர்சனத்தை சந்தித்த கவுண்டமணி நகைச்சுவை: கவுண்டமணியின் நகைச்சுவை எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதோ அதே அளவு விமர்சனத்தையும் சந்தித்தவை. அவர் எல்லோரையும் உருவ கேலி செய்கிறார்; எட்டி உதைக்கிறேன் என்ற பெயரில் வன்முறையை நிகழ்த்துகிறார் என்று சிலர் அவர் மீது விமர்சனத்தை வைப்பதுண்டு. ஆனால் அப்படி செய்தது தவறு என்றால் அவரது காமெடியை மக்கள் ரசித்திருக்கமாட்டார்கள். மக்களின் மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் அவர் திரையில் கொண்டு வந்தார் என அவரது ரசிகர்கள் கூறுவர்.
எவர்க்ரீன் கூட்டணி கவுண்டமணி, செந்தில்: எத்தனை விமர்சனங்களை சந்தித்தாலும் கவுண்டமணி & செந்தில் கூட்டணிதான் தமிழ் சினிமா நகைச்சுவையின் கொண்டாட்டமான காலம். ஒருபக்கம் கவுண்டமணி கவுண்ட்டர்கள் கொடுக்க, மறுபக்கம் செந்தில் வெகுளித்தனமான முகத்தையும், சிரிப்பு வரவைக்கக்கூடிய உடல் மொழி, வாய் மொழியையும் வைத்துக்கொள்ள இருவரையும் ஸ்க்ரீனில் பார்த்தாலே இப்போதும் வயிறு வலிக்க சிரிக்கிறார்கள் ரசிகர்கள்.

யாராக இருந்தாலும் கலாய்தான்: கவுண்டமணி திரையில் மட்டுமில்லை நேரிலுமே யார் என்னவென்று பார்க்காமல் தனது கவுண்ட்டர்களால் அதகளம் செய்துவிடுவார். இதனை சத்யராஜ் பலமுறை பொதுவெளியில் சொல்லியிருக்கிறார். உதாரணமாக, ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் ஒருவர் கவுண்டமணியிடம், சார் நான் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்திருக்கிறேன்.
ஒரு பள்ளிக்கு விருந்தினராக சென்றபோது அங்கு இருந்தவர்கள் நீங்கள் ஹீரோவாக நடிக்கலாமே என்று சொன்னார்கள் அதான் இந்த முடிவு என்றாராம். அதற்கு கவுண்டமணியோ அது பிளைண்ட் ஸ்கூலாக இருக்கும் ப்பா என்று டைமிங்கில் சொன்னாராம். இப்படி யாராக இருந்தாலும் கவுண்ட்டர் கொடுத்துவிடுவார் கவுண்டமணி.

கமலை கலாய்த்த கவுண்டமணி?: ரஜினி, சத்யராஜ், கார்த்திக், விஜயகாந்த் உள்ளிட்டோருடன் பல படங்களில் நடித்த கவுண்டமணி கமலுடன் சிங்காரவேலன், இந்தியன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதற்கு காரணமாக இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, ஷூட்டிங் ஸ்பாட்டில் யார் நடித்தாலும் தனக்கு தோன்றினால் அவர்களை கலாய்த்து தள்ளிவிடுவாராம் கவுண்டமணி.
அப்படி ஒருநாள் சிங்காரவேலன் படப்பிடிப்பில் கமல் நடித்துக்கொண்டிருந்தபோது வழக்கம்போல கவுண்டமணி கலாய்க்க; காண்டான கமல் ஹாசன் உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கோபத்தோடு கிளம்பி போய்விட்டாராம். அதன் பிறகு அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார்களாம். இதனால்தான் கவுண்டமணியுடன் இணைந்து நடிப்பதை பெரும்பாலும் கமல் ஹாசன் விரும்பமாட்டாராம். இந்தத் தகவல் இப்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகிறது.


Click it and Unblock the Notifications











