Kamal Haasan - விஜய் சேதுபதி போல் மாறும் கமல்ஹாசன்?.. சிம்புவுக்காக செய்யப்போகும் செயல் இதுவா?
சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு கமிட்டாகியிருக்கும் படத்தில் கமல் ஹாசன் கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
தனிப்பட்ட சில பிரச்னைகள் காரணமாக சிம்பு திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தார். ஒருவழியாக எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. எனவே தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் தடுமாறுவாரோ என ரசிகர்கள் கவலை கொள்ள ஆரம்பித்தனர்.

நூறு கோடி ரூபாய் க்ளப்: இப்படிப்பட்ட சூழலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அரசியல் களத்தையும், டைம் லூப் கான்செப்ட்டையும் மையமாக வைத்து படம் உருவாகியிருந்தது. சிம்புவின் எனர்ஜியான நடிப்பு, வெங்கட் பிரபு அசாத்தியமான திரைக்கதை ஆகியவை இணைந்து படத்தை மெகா ஹிட்டாக்கின. மேலும் படமானது நூறு கோடி ரூபாயை வசூலித்து அசத்தியது.
வெந்து தணிந்தது காடு: இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக சிம்புவின் நடிப்பை பார்த்த பலரும் சிறந்த நடிகர் என்பதை சிம்பு உணர்த்திவிட்டார் என புகழ்ந்தனர். தொடர்ந்து நடித்த பத்து தல படம் சறுக்கியது. கன்னட படமான மஃப்டி படத்தின் ரீமேக்காக அது அமைந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வரிசையாக இரண்டு ஹிட் கொடுத்த எஸ்டிஆர் மூன்றாவது படத்தில் சறுக்கியது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட்.
கமல் தயாரிப்பில்: தற்போது தனது 48ஆவது படத்தில் நடிக்க கமல் ஹாசன் தயாரிப்பில் கமிட்டாகியிருக்கிறார். படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். பத்து தல படத்தில் ஏற்பட்ட சறுக்கலை இந்தப் படத்தின் மூலம் சரி பண்ணிவிடலாம் என்ற முனைப்பில் சிம்பு பணியாற்றவிருக்கிறார். இதற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளை கற்றுக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேமியோ ரோலில் கமல் ஹாசன்?: இந்நிலையில் எஸ்டிஆர் 48 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் கமல் ஹாசன் கேமியோ ரோலில் நடிக்கவிருக்கிறாராம். அதுகுறித்த பேச்சுவார்த்தை முடிந்து ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கமல் ஹாசன் - மணிரத்னம் இணையும் படத்தில் சிம்பு கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் உலாவியது கவனிக்கத்தது.
என்ன ஆண்டவரே இதெல்லாம்?: கமல்ஹாசனும் தனது கரியரின் இரண்டாவது சுற்றில் இருக்கிறார். இந்த முறை அவர் எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்துவருகிறார். உதாரணமாக ஹீரோவாக மட்டும் நடித்து வந்த கமல் கல்கி ஏடி 2898 படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்போது சிம்பு படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவிருக்கிறார். இதனையெல்லாம் பார்த்த கமல் ரசிகர்கள் என்ன ஆண்டவரே விஜய் சேதுபதி மாதிரி மாறிட்டீங்களே என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.


Click it and Unblock the Notifications











