Don't Miss!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Technology
Oneplus Nord 2T 5G வந்தாச்சு: பட்ஜெட் விலையில் நச்சுனு அம்சம்- கொடுக்குற காசுக்கு தகுமா?
- News
வருமான வரித்துறையிடம் எனக்கு லவ் லெட்டர் வந்திருக்கிறது.. ஐடி நோட்டீஸ் குறித்து சரத்பவார் கிண்டல்
- Lifestyle
மிதுனம் செல்லும் புதனால் அடுத்த 15 நாட்கள் இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது...
- Finance
பிளாஸ்டிக் தடையால் அடித்தது ஜாக்பாட்: ஆனால் காத்திருக்கும் மிகப்பெரிய சவால்!
- Automobiles
ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
லாக்டவுன் நேரத்தில் பணக்கஷ்டத்தால் 2000 ரூபாய்க்கு நடிக்கப்போனேன்.. கமலின் முன்னாள் மனைவி வேதனை!
மும்பை: 5 வயதிலேயே சினிமாவில் நடித்து அசத்தியவர் கமல்ஹாசனின் மனைவி சரிகா.
ஆனால், கடந்த லாக்டவுன் காலக் கட்டத்தில் காசு எல்லாம் தீர்ந்து போய் ரொம்பவே அவதிப்பட்டதாக சமீபத்தில் வெளியிட்டுள்ள பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசி உள்ளார்.
நாடகங்களில் நடிக்க முடிவு செய்த நிலையில், ஒரு நாடகத்திற்கு 2 ஆயிரம் முதல் 2,700 வரை கொடுப்பார்கள் என்கின்றார்.
பிறந்த
நாள்
அதுவுமா…
கமல்
கொடுத்த
சர்ப்ரைஸ்..
மகிழ்ச்சியில்
சாய்
பல்லவி
!

கமல் மனைவி
1988ம் ஆண்டு நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டார் கமல்ஹாசன். பின்னர், 2004ம் ஆண்டு சரிகாவை விவாகரத்து செய்தார். கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதியினருக்கு பிறந்த மகள்கள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷ்ரா ஹாசன். இந்நிலையில், நடிகை சரிகா லாக்டவுன் சமயத்தில் காசுக்கே ரொம்ப கஷ்டப்பட்டேன் எனக் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தேசிய விருது வென்ற நடிகை
5 வயதிலேயே சிறுவனாக வேடமிட்டு இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை சரிகா. 1967ம் ஆண்டு முதல் ஏகப்பட்ட இந்தி படங்களில் இவர் நடித்துள்ளார். Parzania எனும் ஆங்கிலப் படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார் சரிகா. கமல்ஹாசனின் ஹே ராம் படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதையும் சரிகா தட்டிச் சென்றார்.

நடிப்புக்கு முழுக்கு
டெல்லியை சேர்ந்த சரிகா கமல்ஹாசனின் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார். இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு சென்னைக்கு வந்த சரிகா நடிப்புக்கு முழுக்குப் போட்டு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வந்தார். ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரு மகள்களை வளர்த்து ஆளாக்க வேண்டிய நிலையில், குடும்ப பாரத்தை சுமந்தார்.

மீண்டும் நடிப்பு
1988ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், சினிமாவுக்கு குட்பை சொன்ன சரிகா 1997ம் ஆண்டு மீண்டும் ஆக்ரி சங்குர்ஷ் எனும் இந்தி படத்தில் நடிக்க ஆரம்பித்தார். 2003ம் ஆண்டு புன்னகைப் பூவே எனும் தமிழ் படத்தில் நடித்தார். 2004ம் ஆண்டு கமல்ஹாசன் உடன் விவாகரத்து ஏற்பட்டது. அதன் பிறகு ஆங்கில படங்கள், இந்தி படங்கள் என நடித்து வந்த சரிகா 2014ம் ஆண்டு யுத் எனும் சீரியலில் அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடித்தார்.

காசுக்கே கஷ்டம்
இரு மகள்களும் பெரிய பொண்ணாக மாறி சினிமாவில் நடிகைகளாக வலம் வரும் நிலையில், அம்மா சரிகா கடந்த லாக்டவுன் நேரத்தில் காசுக்கே கஷ்டப்பட்டேன் என சமீபத்திய பேட்டியில் பேசியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான சரிகா மீண்டும் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். சுமார் 5 ஆண்டுகளாக நாடகங்களில் நடித்து வருவதாக கூறியுள்ளார்.

வெறும் 2,700 ரூபாய்
நாடகங்களில் நடிக்க சென்றால் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 2,700 ரூபாய் வரை கிடைக்கும் அதை வைத்துத் தான் கடந்த 5 ஆண்டுகளாக ஓட்டி வருகிறேன் என பல திடுக்கிடும் தகவல்களை கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் நடிகை சரிகா. இந்நிலையில், புதிதாக வெளியாக உள்ள வெப்சீரிஸ் ஒன்றிலும் சரிகா நடித்துள்ளார்.

ஓடிடியில் சரிகா
இயக்குநர் அலங்க்ரிதா ஸ்ரீவத்சவா இயக்கத்தில் அமேசான் பிரமில் வரும் மே 13ம் தேதி ஒளிபரப்பாகவுள்ள ஆந்தாலஜியில் சரிகா நடித்துள்ளார். My Beautiful Wrinkles எனும் கதையின் மூலம் ஓடிடிக்கும் அடியெடுத்து வைத்திருக்கிறார் நடிகை சரிகா. வரும் மே 15ம் தேதி கமல்ஹாசனின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.