சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்: மொட்டையாக ட்வீட்டிய கமல் ஹாஸன்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்துள்ள நிலையில் கமல் ஹாஸன் தனது ட்விட்டர் பக்கத்தில் சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார். ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலுக்கு ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் அஞ்சலி செலுத்தினார்.

கமல் ஹாஸன் அந்த பக்கமே வரவில்லை. இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.
கமலின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து நாட்டை விட்டே வெளியேறப் போவதாக கமல் அறிவித்தார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களை அழைத்து விளக்கம் அளித்தார்.
Comments


Click it and Unblock the Notifications